நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்
______________________________ நினைவுதிர்காலம் (யுவன் சந்திரசேகர்) _______________________________ இப்புதினத்தின் மையம் இசை. இசையின் விரிவையும், ஆழத்தையும் தனது சுயமாக்கிக் கொண்டு வெற்றி பெற்ற கலைஞனின் வரலாறு. ஆசிரியர் இதற்குமுன் எழுதிய "கானல் நதி " புதினத்தின் தொடர்ச்சியாகக்கூட இந்நூலைக் கொள்ளலாம். இசைக்காகத் தன்னை அழித்துக் கொண்ட கலைஞனின் கதை "கானல் நதி " என்றால் ... இசையின் மூலம் தன்னை உயர்த்திக் கொண்ட கலைஞனின் கதை "நினைவுதிர் காலம் "... முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி .. இரண்டாவது வெற்றியாளனின் வரலாறு... (விலை : ரூ 230) (காலச்சுவடு பதிப்பகம்)