பொன்னியின் செல்வன் - கல்கி
_______________________________
பொன்னியின் செல்வன்
(கல்கி)
________________________________
கல்கி அவர்கள் எழுதிய புகழ் பெற்ற புதினம்.1950 - 1955 வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.
இப்புதினம் புதுவெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.300 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.
கி.பி 1000 ஆண்டுவாக்கில் இருந்த சோழப்பேரரசை அடிப்படையாகக் கொண்டு, கற்பனைக் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்.
பொன்னியின் செல்வன் இராஜராஜசோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்களுள் ஒன்று. கதாநாயகன் வாணர் குலத்தலைவன் வல்லவரையன் வந்தியத்தேவன். இப்புதினத்தை படித்து முடிக்கும்வரை சோழநாட்டில் நாம் வாழ்வது போன்ற .. உலாவுவது போன்ற.. உணர்வு ஏற்படும்.. பல இலக்கிய ஆர்வலர்களின் கருத்தும் இதுவே..
படித்து முடித்த பிறகு அக்காலத்தில் குந்தவை பிராட்டிக்கு ஒரு சேடிப்பெண்ணாக மட்டுமாவது வாழ்ந்திருக்கலாமே என்ற ஏக்கத்தை தோற்றுவிக்கும் புதினம்.
(விலை : ரூ 400)
(சாரதா பதிப்பகம்)
Comments
Post a Comment