எழில் விருத்தம்(கவிஞர் வாணிதாசன்)
_____________________________ எழில் விருத்தம் (கவிஞர் வாணிதாசன்) ______________________________ படிக்கும் அனைவரும் இன்புறத்தக்க எழில்மிக்க கவிதைகளை இனிய தமிழில் ஏற்றமுற பாடியவர்.. புரட்சிக்கவிஞரின் மதிப்புமிக்க மாணவர்.. இனிய, எளிய சொற்களின் மூலம் ஓசைநயம் மிக்க கவிதைகளை படைத்தவர்.. கற்பனை சிறப்பிற்கு உறுதுணை உவமை, உருவகம் போன்ற அணிகள்.கவிஞரின் கவிதைகளிள் இவை நிறைந்து ஒளிர்கின்றன. "காக்கைநிற நள்ளிரவே " "குளத்தினிலே தாமரைகள் தமிழ்மன்னர் கூட்டம் " "தைத்திங்கள் குளம்பூத்த பூவோ? விண்மீன் .. தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ? "ஒன்று கேட்பேன் கோட்டானைப் போல் உனக்கு பகலில் கண் குருடோ? " இதைப் போல பல சொற்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். வாசியுங்கள்! "எழில் விருத்தம் " நம் மனதை மகிழ்விக்கும், மயக்கும் பூஞ்சோலை.. (விலை : ரூ 36) (திருவள்ளுவர் பதிப்பகம்)