Posts

Showing posts from March, 2022

சிதம்பர நினைவுகள்(பாலச்சந்திரன் சுள்ளிக்காடு)தமிழில்...கே.வி.ஷைலஜா

______________________________________ சிதம்பர நினைவுகள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு) தமிழில்...கே.வி.ஷைலஜா ______________________________________         இது ஒரு கவிதை நூல் அல்ல. கவிதையைப் போல் வாழ்ந்த கவிஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள்.         தம் மனதில் ஏற்பட்ட காயங்கள்.. வடுக்கள் .. அகற்ற முடியாத அவமானங்கள்..சறுக்கல்கள் .. முதலியவற்றை மனம் திறந்துக் கூறுகிறார்.       வாசிப்பவர்களுக்கு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு ஏற்படாமல் மூலநூலைப் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும் வகையில் எளிய, இனிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஷைலஜா அவர்கள்.        "வாழ்வில் சில நினைவுகள் மங்கி மறைந்து போகாமல் மனதில் மீண்டும் மீண்டும் அலை மோதிக் கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்த்துப் பார்க்கத் தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்த வாழ்க்கைக் குறிப்புகள் " என்று ஆசிரியரே (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு) கூறியுள்ளார்.                   (விலை : ரூ 150)   ...

தெரு வாசகம்(யுகபாரதி)

________________________________ தெரு வாசகம் (யுகபாரதி) ________________________________         வீதியே சொந்தமென்று கிடக்கின்ற சாமானியர்களுக்கானது இந்த "தெரு வாசகம் ".        இன்னும் எழுதப்படாமல் இருக்கின்ற மனிதர்களைப் பற்றிய பதிவு.நாம் தினமும் சந்திக்கின்ற, நமக்காக சுமையை சுமப்பவர்கள், நமக்காக நாற்றத்தை சுவாசிப்பவர்கள் இது போன்றவர்கள் தான் கவிதையின் நாயகர்கள்.         நிலவோடு சேர்ந்து நித்திரையைத் தொலைக்கும் கூர்க்கா, மஞ்சள் வெயில் உதிர உதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம், அந்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவன் இவர்களைப் பற்றி, ஒரு சிக்னலில் காத்திருக்கும் நேரம் கூட நாம் யோசிப்பதில்லை.  இவர்களே இந்நூலின் பாடு பொருள்கள்.📕                  (விலை : ரூ 65)                  (நேர்நிரை பதிப்பகம்)

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்(கவிஞர் தாமரை)

_________________________ ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் (கவிஞர் தாமரை) _________________________      ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈரமனதுடன் தொடர்ந்து குரல் கொடுப்பவர்! இவரின் முதல் கவிதை நூல் இது!     இந்தக் கவிதைநூல்தான் திரைப்படப் பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்துள்ளது!       பரிசு பெற்ற கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கவிதைகள் இவற்றையெல்லாம் தொகுத்து நூலாக்கி உள்ளார்!     கவிதையின் கடைசி வரியை முத்தாய்ப்பாக முடிப்பது சிறந்த கலை!      ஈழத்தமிழன் வாழ்வில் விடிவு உண்டு என்ற நம்பிக்கை உண்டு திலீபா! உயிருக்கு நீ தந்த மரியாதை உலகில் வேறெவனும் தந்ததில்லை! சாவிலும் வாழ்ந்தவன் நீ! தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான்! காலுக்குக் கீழே நீ வேராக உள்ளதால்! "ஒட்டடை " யார் அடிப்பது மனதின் ஒட்டடை!  மனிதனின் மன அழுக்குக்கைப் படம் பிடித்துக்காட்டுகிறார்!  சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் அதிகமாக உள்ள நூல் இது! 📚

மண்(ஜெயமோகன்)

_________________________ மண் (ஜெயமோகன்) _________________________      சிங்கன் மலை தொடர்பான நுட்பமான விவரிப்புகள், வறட்சியால் அழியப்போகும் கொம்பன்விளை ஊரினை கற்பனையாக மனதுக்குக் கொண்டு வரப்பட்டு எழுதப்பட்டது இந்நூல்!      பிரதானமாக வரும் சிங்க மூப்பன் மற்றும் கொம்பன், அப்பு பண்டாரம், சின்னையன் மற்றும் பாக்கியம் பற்றிய விவரிப்பு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்தும்!       அப்பு பண்டாரம் பாக்கியாம் சாவு பற்றிய வர்ணனைகள் உச்சக்கட்ட வேதனை விவரிப்பு!      கிளாசிக் என்ற சொல்லின் விளக்கம் இக்குறுநாவலில் அமைந்துள்ளது! 📚

47 நாட்கள்(சிவசங்கரி)

_________________________________ 47 நாட்கள் (சிவசங்கரி) __________________________________         மணமகனை (குமார்) சரியாக தேர்வு செய்யாததால் அவனை மணம் செய்த பெண் (விசாலி) அவனால் துன்பப்பட்டு 47 நாட்களில் அவள் திருமண வாழ்வு முடிகிறது.         குமார் - விசாலி திருமணம் முடிந்தவுடன் வெளி நாட்டிற்க்குக் கூட்டிச் செல்கிறான்.அங்கு அவனுக்கு ஏற்கனவே வெள்ளைக்காரியுடன் (லூசி) திருமணம் நடைபெற்றுள்ளது.குமார் விசாலியை தங்கை என்று எல்லோருக்கும் அறிமுகப் படுத்துகிறான்.உண்மையை சொன்னால் கஷ்டப்படுவாய் என பயமுறுத்துகிறான்.          அங்கிருந்து தப்பிக்க பல முயற்சி செய்கிறாள். அம்முயற்சிகள் எல்லாம் கணவனால் கண்டுபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகிறாள். பின்பு ஒரு டாக்டரின் உதவியுடன் தாய்வீடு வருகிறாள். 47 நாட்களும் நாமும் விசாலியுடனே பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.                 (விலை : ரூ 100)                 (கங்கை புத்தக நிலையம்)

அடுத்தவீடு(லட்சுமி)

_________________________ அடுத்தவீடு (லட்சுமி) _________________________      மனித இனத்தில் விவசாய மக்கள் எத்தகைய உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதை நம் இலக்கியங்கள் இயம்புகின்றன!     இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை மையமாகக் கொண்டிருக்கிறது என்று அறிஞர்கள் கூறுவர்!       இத்தனைச் சிறப்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விவசாய மக்களின் சமுதாய வாழ்வு எத்தகைய அவலநிலையில் உள்ளது என்பதை இப்புதினம் படம்பிடித்துக்காட்டுகிறது!     ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளிவந்தது!      புரட்சிகரமான சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை துணிந்து புகுத்தி இந்தப் புதினத்தை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் 📚     (பூங்கொடி பதிப்பகம்)

மூளைக்குள் சுற்றுலா(வெ.இறையன்பு)

_____________________________ மூளைக்குள் சுற்றுலா (வெ.இறையன்பு) _____________________________        அறிவியல் தமிழுக்கு அணி சேர்க்கும் பிரமாண்டாமானப் படைப்பு.நமது உடம்புக்குள் உச்சியில் இருந்து கொண்டு ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் பேராற்றல் படைத்த மூளையைப் பற்றிய தகவல்களின் சுரங்கம்.         626 பக்கங்களில் 138 தலைப்புகளிலான கட்டுரைகள், வண்ணப் புகைப்படங்கள், விளக்கப் படங்கள் என அருமையான நூலாக வெளிவந்துள்ளது "மூளைக்குள் சுற்றுலா "       மூளை குறித்து தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்ற அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கெல்லாம் விரிவாக விளக்கம் அளிக்கும் வகையில் இக்கட்டுரைகள் உள்ளன.       மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கும் விளக்கங்களை வாசிக்கும்போது நாம் அறியாமை அகல்கிறது.       விஞ்ஞானத்தை வாழ்வியலுடன் இணைத்து நம் ஆளுகைக்கு வளமூட்டும் பாங்கு வாசிப்பனுபவத்திற்கு செழுமையையும், சுவையையும், வாழ்வியல் பண்பாட்டையும் நல்கி உள்ளன.        நம் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்டு நமக்கு பல அதிசயங்களைக் காண்பித...

லெனினின் வாழ்க்கைக் கதை(மரீயா பிரிலெழாயெவா)

_________________________ லெனினின் வாழ்க்கைக் கதை (மரீயா பிரிலெழாயெவா) _________________________      புரட்சிவீரன் லெனினின் வாழ்க்கை வரலாற்றைக்கூறும் நூல் இது!     விளாதீமிர் இல்யீச்சின் (லெனின்)  வாழ்க்கையையும், உண்மையான விவரங்களையும், செயல் விவரங்களையும் கூறுகிறது!      லெனினின் புரட்சி செயல்களும், அவருடைய எண்ணங்களும், உணர்ச்சிகளும் இந்நூலில் நிறைந்து காணப்படுகிறது!      உழைப்பு! கட்சிக்காக, மக்களுக்காக, புரட்சிக்காக! எப்போதும் எங்கும்! ஓய்வு என்பது கனவில்தான்!      கடுமையான போராட்டத்திற்குப்பின் லெனின் நிறுவிய அரசு வளர்ந்து உரம் பெற்று முதிர்ந்துவிட்டது!      கம்யூனிசம் என்பது நியாயமும் உண்மையும் ஆகும்! எல்லோருடைய நல்வளத்திற்காகவும் எல்லோரும் சேர்ந்து உழைப்பது!📚       (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!(கோபிநாத்)

_________________________ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! (கோபிநாத்) _________________________     அரக்க பரக்க ஓடிக்கொண்டும், அடுத்த நாள் என்ன செய்வது என்று தேடிக் கொண்டும் தோளில் இருந்து கழற்ற முடியாத சுமையாக சவால்களை சுமந்து கொண்டும் களைத்துப் போய் ஓடிக்கொண்டிருக்கிறோம்!       நமக்கு நாம் சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா....       ஓடுகிற திசையில் நம் இலக்கு இருக்கிறதா....என்று ஒரு மரத்தடியில் உட்கார வைத்து யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் உதவலாம்!       என்ன செய்து கொண்டு இருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் பார்வையாக இந்தப் புத்தகம் இருக்கும்! 📚        (சிக்ஸத்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

காவி நிறத்தில் ஒரு காதல்(வைரமுத்து)

________________________ காவி நிறத்தில் ஒரு காதல் (வைரமுத்து) _________________________       இம் மண்ணில் தற்போது மாறி வரும் மனித மதிப்பீடுகள், பண்பாட்டு மாற்றங்கள், வீழ்ச்சிகள், நாகரிகத்தின் நசிவுகள், சமூக வாழ்வை ஊடுருவிக் கிழிக்கும் அரசியல் முதலியவற்றைப் பற்றி பேசும் நூல்!      சமூக வாழ்விலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு அடர்ந்த வனாந்தரத்தில் வாசமிருந்த ஒரு சாமியார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சராசரி வாழ்வோடு சங்கமிக்க வருகிறார்!     அவரை ஒரு யாத்திரைக்கு ஆளாக்கி, சமூகத்தின் உட்பரப்புகளில் ஊடுருவ விட்டு, உலகியல் மாறுதல்களை உணர்த்திக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர்!      மனிதர்கள் முகங்களால் வேறுபட்டிருப்பது மாதிரியே எண்ணங்களாலும் வேறுபட்டிருக்கிறார்கள்!      அந்த எண்ண வேறுபாடுகளை எழுத்துத் தராசில் நிறுத்துப்பார்க்க முயன்றிருக்கிறார் கவிப்பேரரசு! 📚      (திருமகள் நிலையம்)

பெரிதினும் பெரிது கேள்(த.செந்தில்குமார்)

______________________________ பெரிதினும் பெரிது கேள் (த.செந்தில்குமார்) _______________________________        இளைஞர்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விசயங்களோடு தொடங்க வேண்டும்.       ஒரு வேலையைப் புதுப்புது கோணங்களில் அணுக வேண்டும்.அவர்கள் வெற்றியை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.        சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்த தியாகிகள், தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சை பெரிய கோயிலின் சரித்திரம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் என இந்த நூலெங்கும் அரிய தகவல்களைத் தந்துள்ளார் ஆசிரியர்.       அரிதினும் அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகம் இந்நூல்.                   (விலை : ரூ 420)                   (விகடன் பிரசுரம்)

சேற்றில் மனிதர்கள்(ராஜம் கிருஷ்ணன்)

____________________________ சேற்றில் மனிதர்கள் (ராஜம் கிருஷ்ணன்) ____________________________        உழவர் வாழ்வின் உழைப்பும், அவர்களின் நிலையும் எடுத்துக் காட்டப்படுகிறது.1982 இல் வெளிவந்த புதினம் இது.      வேளாண் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் எந்தெந்த வகையில் நிலம் உடைமையாளர் வர்க்கத்தால் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் புதினம் இது.        அடித்தள வர்க்கத்தை, மேல்தட்டு வர்க்கம் அமுக்கி அடக்குவது சித்தரிக்கப் பட்டுள்ளது.       உரிமை கேட்டுப் போராடும் பெண்களுக்கு, கற்பனையில் தீர்வுகளைக் கூறாமல் எதார்த்தமான முறையில் கதை மாந்தர்கள் மூலம் தீர்வுகளைக் கூறுகிறார்.         இப்புதினத்தில் இடம் பெறும் "காந்திமதி "அந்த வாழ்வின் முறைகளோடு ஒத்துப் போகாது எதிர்த்து நிற்கிறாள்.        தஞ்சை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்ட புதினம் இது. பாரதீய பாஷா பரிஷத் பரிசு, மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற புதினம் இது..             ...

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்..மூலமும் உரையும்..(முனைவர் கமலா முருகன்)

_____________________________ முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்..மூலமும் உரையும்.. (முனைவர் கமலா முருகன்) ______________________________        தேன் என இனிக்கும் சீர்மையானச் சொல்லழகும், பொருளழகும், இசை இனிமையும் கலந்து கற்போர் நெஞ்சை ஈர்த்து என்பையும் உருக்கும் இயல்புடையது இப்பிள்ளைத்தமிழ் பாடல்கள்.        மெய்ப்பொருள் கண்டு மகிழ விரும்புவோர் அனைவரும்,இந்நூல் உரையைப் படித்து சொக்கித்தான் போவார்கள்.        அனைவரும் படித்து பயனடையும் வகையில் அமைந்த நூல் இது.வாசிப்பவர்கள் எளிதாகப் பொருளைப் புரிந்து இலக்கியச் சுவையை பெறும் வகையில் ஆசிரியின் உரை மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. வாசியுங்கள்.இலக்கிய இன்பம் நுகருங்கள்.                  (விலை : ரூ 70)                  (சாரதா பதிப்பகம்)

இலக்கில்லாப் பயணங்கள்(பவா செல்லதுரை)

_________________________________ இலக்கில்லாப் பயணங்கள் (பவா செல்லதுரை) __________________________________         "ஜே.கே வின் ஹென்றி, கல்ப்பட்டாவின் சுமித்ரா, என் டொமினிக்" முதல் "எழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது" ஈறாக 14 கட்டுரைகள் உள்ளடங்கிய தொகுப்பு இந்நூல்.         ஆசிரியரின் வாசிப்பனுபவம், அவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள், நண்பர்களின் மரணங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், திரைப்படத்தில் தன் அனுபவங்கள் என இப்புத்தகம் படிப்பவரின் மனங்களை தன்வசப்படுத்திவிடும்.        பாலாஜி எல்லப்பனின் நேர்காணல் 14 வது கட்டுரை .. நல்லதொரு வாசிப்பனுபவத்தை தரும் நூல் இது..                   (விலை : ரூ 150)                   (வம்சி பதிப்பகம்)

சின்னஞ்சிறு கிளியே(இந்துமதி)

__________________________________ சின்னஞ்சிறு கிளியே (இந்துமதி) ___________________________________         எங்கும் நிறைந்துள்ள சினிமாத் துறையினரின் தொழில் ஈடுபாடுகளை.. அவர்களின் உணர்வுகளை..எதிர்பார்ப்புகளை...ஏமாற்றங்களை..எழுச்சிகளை தன் எழுத்து திறத்தால் இப்புதினத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.          இதில் வரும் மதுசூதனன், சித்ரா, ஸ்ரீநாத், ஜுலி, கோபால் சர்மா ஆகிய பாத்திரங்கள் நாம் அன்றாடம் கேள்விப்படும் சினிமாத் துறையினரின் பிரதிபலிப்புகளே..           ஆசிரியை கதை சொல்லும் திறன், ஆற்றொழுக்கு நடை, சம்பவங்கள், திருப்பங்கள் படிப்போருக்கு நேரில் படம் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும்..                  (விலை : ரூ 225)                  (ராஜராஜன் பதிப்பகம்)

அழகின் சிரிப்பு(பாவேந்தர் பாரதிதாசன்)

_________________________________ அழகின் சிரிப்பு (பாவேந்தர் பாரதிதாசன்) __________________________________        பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, சங்கப் புலவர்களால் பெரிதும் பாடப் பெற்றுள்ளது.        நீண்ட நெடிய மரபினை நன்குணர்ந்த பாவேந்தர் இயற்கையின் (செடி, கொடி, ஆறு, மலை, கடல்...)எழிலைக் கண்டு உளமகிழ்ந்து இயற்றிய பாக்கள் தமிழிலக்கிய வரலாற்றில் சாகாவரம் பெற்றவை.       ஆங்கிலக்கவி வேர்ட்ஸ்வெர்த்தோடு பாவேந்தரை ஒப்பிடுவர்.அழகின் பன்முக நயங்களை எல்லோரும் படித்து மகிழ்வோம்.         அழகு ... "நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள். நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை."        தென்றல்..... "தமிழ்எனக் ககத்தும், தக்க தென்றல்நீ புறத்தும், இன்பம் அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ " "அழகின் சிரிப்பு ஒரு பூஞ்சோலை .. அழகின் சிரிப்பு ஒரு பழத்தோட்டம்.."                 (விலை : ரூ 20)                 (நாம் தமிழர் பதிப்பகம்)

மூன்றாம் பிறை(வாழ்வியல் அனுபவங்கள்) (மம்முட்டி)தமிழில்...கே.வி.ஷைலஜா

___________________________________ மூன்றாம் பிறை (வாழ்வியல் அனுபவங்கள்)  (மம்முட்டி) தமிழில்...கே.வி.ஷைலஜா ___________________________________           " காழ்ச்சபாடு " என்ற மலையாள நூலின் தமிழாக்கம்  "மூன்றாம் பிறை" என்னும் இந்நூல்.           இந்நூலில் "பிடிக்காமலிருந்த என் பெயர் " முதல் "சொர்க்கவாசல் திறக்கும் கதவு " ஈறாக மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன.          திரைப்பட நடிகர் மம்முட்டி அவர்கள், தான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என ஒதுக்கித் தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப் பார்வையை  இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார். அதில் தத்துவார்த்தமான பரிமாணங்களை நாம் தரிசிக்க முடியும்.                      (விலை : ரூ 100)                      (வம்சி பதிப்பகம்)

மனிதன் மாறிவிட்டான்(வெ.இறையன்பு)

_____________________________ மனிதன் மாறிவிட்டான் (வெ.இறையன்பு) ______________________________       இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள்ளும் பல ரகசியங்கள் புதைந்துள்ளது.      உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விசயத்தை நமக்கு உணர்த்தியபடியே தான் இருக்கிறது.      அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பது தான் இந்த "மனிதன் மாறிவிட்டான் " என்ற இப்புத்தகம்.       உடல் உறுப்புகள் என்ன காரணத்திற்காக படைக்கப்பட்டதோ, அந்தக் காரணத்திற்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்று இப்புத்தகம் யோசிக்க வைக்கிறது.        மனதுக்கும் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை இதைவிட எளிமையாகச் சொல்வது கடினம். ஒவ்வொருவரும் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல்.                  (விலை : ரூ 140)                  (விஜயா பதிப்பகம்)

கல்வியில் நாடகம்(பிரளயன்)

_________________________ கல்வியில் நாடகம் (பிரளயன்) _________________________      "கல்வியில் நாடகம் " என்ற ஒரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறையின் ஒரு பகுதியாகவே காட்டும் ஒரு செயற்பாட்டை இணைத்திருக்கிறார் ஆசிரியர்!       வகுப்பறைச் சூழலில் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன் வைக்கப்படுகிறது!        ஒரு பாடத்தின் சமூகவியல் உண்மைகளை பாடப் புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியக்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது!📚    (பாரதி பதிப்பகம்)

ஆலாபனை(கவிக்கோ அப்துல் ரகுமான்)

_________________________ ஆலாபனை (கவிக்கோ அப்துல் ரகுமான்) _________________________     தனக்கென இயல்பானதொரு மொழிக்கட்டை கட்டமைத்துக் கொண்டு தனது வெளியில் சமரசமில்லாமல் எதற்கும் தலைவணங்காமல் பெரும் படைப்புகளை எழுதிக் குவித்தவர்!      42 வசன கவிதைகளின் தொகுப்பு இந்நூல்!      பாக்யா இதழில் இக்கவிதைகள் தொடராக வெளிவந்த போதே வாசகர்கள் வட்டத்தில் வரவேற்பைப் பெற்றது!     அருமையான கவிதைத் தொகுப்பு! 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்றது!    _________ வெற்றி __________ தோல்வியே நீதான் நாம் சம்பாதிக்கும் பணம்! வெற்றியைக்கூட உன்னால் வாங்க முடியும்! ___________ இழந்தவர்கள் ________________ குளிர் காய சுள்ளி பொறுக்கத்  தொடங்கினாய்! சுள்ளி பொறுக்குவதிலேயே உன் ஆயுள்  செலவாகிக் கொண்டிருக்கிறது! 📚       (நேஷனல் பப்ளிஷர்ஸ்)