ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்(கவிஞர் தாமரை)
_________________________
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்
(கவிஞர் தாமரை)
_________________________
ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈரமனதுடன் தொடர்ந்து குரல் கொடுப்பவர்!
இவரின் முதல் கவிதை நூல் இது!
இந்தக் கவிதைநூல்தான் திரைப்படப் பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்துள்ளது!
பரிசு பெற்ற கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கவிதைகள் இவற்றையெல்லாம் தொகுத்து நூலாக்கி உள்ளார்!
கவிதையின் கடைசி வரியை முத்தாய்ப்பாக முடிப்பது சிறந்த கலை!
ஈழத்தமிழன் வாழ்வில் விடிவு உண்டு என்ற நம்பிக்கை உண்டு திலீபா!
உயிருக்கு நீ தந்த மரியாதை உலகில் வேறெவனும் தந்ததில்லை!
சாவிலும் வாழ்ந்தவன் நீ!
தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான்!
காலுக்குக் கீழே நீ வேராக உள்ளதால்!
"ஒட்டடை "
யார் அடிப்பது மனதின் ஒட்டடை!
மனிதனின் மன அழுக்குக்கைப் படம் பிடித்துக்காட்டுகிறார்!
சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் அதிகமாக உள்ள நூல் இது! 📚
Comments
Post a Comment