கோபுர தீபம்(நா.பார்த்தசாரதி)
_________________________ கோபுர தீபம் (நா.பார்த்தசாரதி) _________________________ ஆசிரியரின் முதல் படைப்பு! சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்புதினத்தைப் படைத்துள்ளார்! திருநெல்வேலி மாவட்டமே கதை நிகழும் இடமாகக் கொண்டுள்ளதால் அந்தப் பகுதிகளைப் பற்றிய அறிமுகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது! ஆசிரியரின் இலக்கிய அறிவும், அவர் பாரதி மீது கொண்ட தீராத பற்றும் கதை முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது! நடையில் எளிமையும், கதையோட்டத்தில் விறுவிறுப்பும் உள்ளவாறு கதையைப் படைத்துள்ளார்! தனது உயரிய கருத்துகள் மூலம் விடுதலைப் போராட்ட காலத்தை நம் கண்முன் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நா.பா. அவர்கள்! அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான நூல்! 📚 (சீதை பதிப்பகம்)