குறளோவியம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர்

_________________________
குறளோவியம்
(முத்தமிழ் அறிஞர் கலைஞர்)
_________________________
      கலைஞர் தீட்டிய உரை ஓவியம்..
எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அருமையான காவியம்..
      திருக்குறள் கலைஞருக்கு அருமருந்து என்றால் மிகையாகாது!
    "சுருக்கமாக, சுவையாக குறளுக்குப் பொழிப்புரை பகன்றோர் உளர்!
இசைத்தமிழால் இனிய குறளைச் செவிவழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்!
இவற்றிற்கிடையே என் பங்காக நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி, 
நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும்,
நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும்,
நீர் வழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவ விட்டிருக்கிறேன்! " என்று குறளோவியத்திற்கு குறிப்பு வழங்கினார் கலைஞர்! 
     இதைவிட ஓர் சிறந்த அறிமுகம் இந்நூலுக்கு தேவையில்லை!
இந்நூலை வாசியுங்கள்! 
இலக்கியச் சோலையில் இன்பத் தேனையுண்டு எழுச்சி பெறுவீர்கள்! 📚
         (பாரதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்