Posts

Showing posts from October, 2021

நேர் நேர் தேமா(கோபிநாத்)

_________________________ நேர் நேர் தேமா (கோபிநாத்) _________________________       அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் எனப் பலதுறை சார்ந்த மனிதர்களோடு விஜய் தொலைக்காட்சி வழியாக பேட்டி கண்ட அனுபவத்தில் இந்தப் படைப்பு முன்வைக்கப்படுகிறது!       ஆசிரியர் சந்தித்த சிறப்பான மனிதர்கள் பேசிய செய்திகள், தங்கள் துறையில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன! 📚          (விலை : ரூ 180)            (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

ஆகாயத்தாமரை(அசோகமித்திரன்)

_______________________________ ஆகாயத்தாமரை (அசோகமித்திரன்) _______________________________        இரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ஆகாயத்தாமரையாக விரிகிறது!        இரகுநாதனின் செயல்களை, உணர்வுகள் அவனை பாதிக்கும் நிகழ்வுகளை, அவன் சிக்கிக் கொள்ளும் நெருக்கடிகளின் தன்மைகளை, அவனுக்குக் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளை, அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதங்களை நுணுக்கமாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர்!        இந்தச் சித்தரிப்புகளில் குடும்ப உறவுகள், சமூக உறவுகள், அலுவலக நடைமுறைகள் எனப் பல அம்சங்கள் விளங்குகின்றன!          வாழ்வில் அவரவர் பாதையை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்னும் கருத்தை சிந்திக்க வைக்கும் புதினம்.       ஆகாயத்தாமரை என்னும் கற்பனையை, மானுடக் கனவுகளின் குறியீடாக உருவகிக்கும் இப்புதினம், இந்தக் குறியீட்டின் பின்புலத்தில் வாழ்வின் எதார்த்தத்தைக் காட்டுகிறது! அசோகமித்திரனின் அற்புதப் படை...

செம்பருத்தி(தி.ஜானகிராமன்)

__________________________________ செம்பருத்தி (தி.ஜானகிராமன்) ___________________________________         தி.ஜா வின் நாவல் வரிசையில் ஆண், பெண் உறவு சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் மற்றொரு படைப்பு "செம்பருத்தி "...        மற்ற புதினங்களைவிட மன விசாரங்களும், தத்துவ விசாரங்களும் சற்று அதிகமாகவே அலசப்பட்டிருக்கின்றன.       பணத்தைவிட மனிதர்களைச் சம்பாதித்து, அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அதை நிலைத்திருக்கச் செய்வதே மனிதனின் உண்மையான வெற்றி.. இந்நூலில் சட்டநாதனும் இவ்வகைதான்..         பெண்கள் நிரம்பிய அவனது உலத்தில் அவர்களூடே பயணித்து, புரிந்து கொள்ள முயலுவதும், அவன் கடந்துவரும் மூன்று பெண்கள் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இப்புதினம்..        சரளமான நடை, உரையாடல் மூலம் கதையை நகர்த்தும் உத்தி, கதை முடிச்சை சொற்களில் பொதிந்து தரும் லாவகம் என தி.ஜா முத்திரையை அழுத்தப் பதித்து இந்நூலை ஆக்கியுள்ளார்..               (விலை : ரூ 220)   ...

பெற்ற மனம்(மு.வரதராசன்)

பெற்ற மனம் (மு.வரதராசன்) _________________________       சென்னை வாழ்க்கை  நிலைகளில் பலவாறு இகழ்ந்தும், பழித்தும் ஒதுக்கப்பட்டாள் ஒருத்தி!        ஆயினும் அவளுடைய தூய நெஞ்சத்தில்  தாய்மை உணர்ச்சி ஒதுங்கவில்லை!  ஒடுங்கவில்லை!        "தாய்மை உணர்வு நிறைந்து நின்று அவளுடைய வாழ்வை இயக்கியது "என்பதை விளக்கும் புதினம்!         உள்ளத்தைக் கவரும் உன்னதத் தமிழால் உரைநடைத் தமிழால் வாசக நெஞ்சங்களை வசீகரிக்கும் புதினம்!! 📚                   (விலை : ரூ 160)                   (பாரி நிலையம்)

ஒரு சிறு இசை(வண்ணதாசன்)

_______________________________ ஒரு சிறு இசை (வண்ணதாசன்) _______________________________         ஆசிரியரின் பன்னிரெண்டாவது சிறுகதைத் தொகுதி! இத்தொகுதியில்15 சிறுகதைகள் உள்ளன!         வண்ணதாசனுக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்கள் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும், உறவும்அதிகமாகப் பேசப்படுகிறது!        முதுமைகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இந்நூலில் உள்ளன! தாமிரபரணி ஆற்றின் நீர்மையுடன் கூடிய கதைகள் சிலவற்றில் இசை தென்படுகிறது!          இச்சிறுகதைத் தொகுப்பிற்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது!              (விலை : ரூ 160)             (சந்தியா பதிப்பகம்)

என்பிலதனை வெயில் காயும்(நாஞ்சில் நாடன்)

______________________________ என்பிலதனை வெயில் காயும் (நாஞ்சில் நாடன்) _______________________________         படிக்கப் படிக்க அதன் போக்கிலேயே ரசிக்க வைக்கும் நூல்.       புத்தகம் முழுக்க சுவாரஸ்யங்கள் ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில்.. இயற்கையாக அமைந்துள்ள எழுத்து நடை .. புத்தகத்தின் பலம் ... படிக்கும்போதே காட்சிகள் கண்முன் விரியும்..      புதினத்தின் பக்கங்கள் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன.ஆயினும் வறுமை என்னும் கொடுமை மெல்லிய நூழிலைகளால் பின்னப்பட்ட சிலந்தியின் வலைபோல் கதை முழுவதிலும் பிணைந்து கிடக்கின்றன.          புதுப்புது புத்தகங்கள் எண்ணிலடங்கா வந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் நாம் படிக்காமல் விட்ட இது போன்ற நல்ல நூல்களைத் தேடிப் படிக்கையில் கால எந்திரத்தில் பயணித்துப் பின்னோக்கிச் செல்வது போன்ற ஒரு உணர்வு கண்டிப்பாக ஏற்படும்..                   (விலை : ரூ 120)                   (வி...

வையத் தலைமை கொள்..(வெ.இறையன்பு)

_____________________________ வையத் தலைமை கொள்.. (வெ.இறையன்பு) _____________________________       துடிப்பாகவும், முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாகக் கணித்து, தீர்க்கமாக முடிவெடுப்பவர்க்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது!        அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்! நம் உள்ளுணர்வுக்காக பணியாற்றினால் மட்டுமே உழைப்பு!       நமக்காக உழைக்கிறோம் என்ற ஈடுபாட்டுடன் செயலாற்றுபவர்கள் மட்டுமே, தலைமைப் பொறுப்பை அலங்கரிக்க முடியும் என்ற சூழல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, இளைஞர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் செப்பனிட்டுத் தருகிறது இந்நூல்!           (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

வைரங்கள்(சுஜாதா)

______________________________ வைரங்கள் (சுஜாதா) ______________________________        கல்கியில் தொடராக வந்த "வைரங்கள் " சுஜாதாவின் முக்கியமான புதினங்களில் ஒன்று!        ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல் தட்டுப்படுகிறது!       மெல்லிய வெளிச்சம் ஓடும் கல், விலை உயர்ந்த வைரக்கல் அது! கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும் போது, ராலிமுக்கு கிராமத்தின் சூழல் சட்டென்று மாறிப் போகிறது!      அங்கே எளிமையாக டீக்கடை நடத்திவரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது! சம்மந்தமே இல்லாமல் ஓர் ஏழைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது!             (கிழக்கு பதிப்பகம்)

கதாவிலாசம்(எஸ்.இராமகிருஷ்ணன்)

________________________________ கதாவிலாசம் (எஸ்.இராமகிருஷ்ணன்) ________________________________        எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள்! சமூகத்தின் சாட்சிகள்!        ஒரு படைப்பு வாழ்வை இன்னும் அர்த்தப்படுத்தியபடியே வாழ்ந்து கொண்டே இருக்கும்! எப்போதும் நம் தமிழ் மரபே கதை மரபுதான்!       வைத்தது யார் என்று தெரியாமல் அடர்ந்து கிடக்கின்ற வனத்தைப் போல கதைகளும் நம்மைச்சுற்றி வளர்ந்து கிடக்கின்றன!       தமிழில் முக்கியமான எழுத்தாளர்கன் படைப்புகளின் வழியாக எஸ்.ரா அவர்கள் நடத்திய இலக்கிய பயணமே கதாவிலாசம்!       தன்னை பாதித்த தமிழ் எழுத்தாளர்காளின் கதைகளையும், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து சுவைபட எழுதியுள்ளார்!        வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது! மகத்தானது! மனிதர்கள் எத்தனை விதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என்ற ஆச்சரியங்களையும், கேள்விகளையும் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் ஏற்படுத்தும்!               (விகடன் பிரசுரம்)

சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்(நா.காமராசன்)

_________________________ சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் (நா.காமராசன்) _________________________       புதுக்கவிதை, வசன கவிதை ஆகிய துறைகளில் தன் சிறப்பை வெளிப்படுத்தியவர்!       கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக்கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்! இவர் ஓர் உருவகக்கவிஞர்!         அழகானக் கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர்! கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்! இவர் அவ்வப்போது எழுதிய எழுத்து மலர்களைத் தொகுத்து, தொடுத்து இலக்கிய மாலையாக்கி உள்ளார்!      "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் "பொதுவுடைமைக் கருத்துக் கருவூலம்! "தீமைக்குத் தீயிடுவோம்! தேவைக்குக் குரல் கொடுப்போம்! தோழர்கள் ஒன்றானால் உழைப்பே தொழிற்சாலை ஆகிவிடும் "   என்னென்றும் நினைவில் ஆடும் பொன்னூஞ்சல் இந்நூல் 📚                     (விலை : ரூ 60)                     (கவிதா பதிப்பகம்)

கலாம் ஒரு சரித்திரம்(அமுதன்)

______________________________ கலாம் ஒரு சரித்திரம் (அமுதன்) ______________________________        எளிய குடும்பத்தில் பிறந்து, மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர்!        அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எழுதப்பட்ட நூல் இது!         கலாமின் அண்ணன் மகள், மகன், பேரன், பேத்தி இவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் பேட்டிகள், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர்கள் சிவக்குமார், விவேக் ஆகியோர் பகிர்ந்து கொண்ட மனதைத் தொடும் நினைவலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன!       வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடு! கலங்கரைவிளக்கம்!!            (தினத்தந்தி வெளியீடு)

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்(தமிழருவி மணியன்)

________________________________ மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (தமிழருவி மணியன்) _________________________________         இந்த உலகிலேயே அமைதியும், அன்பும் நிரம்பிய சொர்க்கலோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் கட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம்.        சான்றோர் வாக்குகள் மாமருந்தாகத் திகழ்ந்து, மனிதகுலத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கின்றன.         ஆனால், மனிதமனம் வெறுப்பு.. ஏமாற்றம், எதிர்மறைச் சிந்தனைகளால் அலைக்கழிப்பு - இப்படி துன்புறுகிறது. இதற்கானக் காரணத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர்.          மனித வாழ்வோடு தொடர்புடைய 30 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.சக்தி விகடனில் தொடராக வெளிவந்தது.          வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிபடுத்தும் அருமருந்து இந்நூல் ..                     (விலை :ரூ 100)                     (விகடன் பிரசுரம்)

கொடிமுல்லை(வாணிதாசன்)

_________________________ கொடிமுல்லை (வாணிதாசன்) _________________________         இயற்கை அழகை வெளிப்படுத்தவும், செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது!         பகுத்தறிவுப் பார்வையோடு இக்காவியம் தொடங்குகிறது! உவமை, கற்பனை எனும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் கவிஞர்!       பொருள் புரியும் வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் போன்ற நடையமைப்பினை இக்காவியத்தில் காணலாம்!        காப்பியத்தலைவி காப்பியத் தலைவனைவிடக் கூர்ந்த அறிவுடையவராகவும், செயல்திறம் மிக்கவராகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப்படுத்துவது கவிஞரின் விருப்பம் என்பது தெளிவாகத் தெரியும்!!       "கொடிமுல்லை "வாசகர்களை வாசத்தால் தன்வயமாக்கும் "வாசமுல்லை "📚                   (விலை : ரூ 30)                   (சாரதா பதிப்பகம்)

மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்

________________________________ மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள் __________________________________       இந்தத் தொகுப்பில் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களும் ஆசான்களுமான காரல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் மற்றும் இவர்களது சமகாலத்தில் வாழ்ந்தவர்களது நினைவுக் குறிப்புகள் உள்ளன.        இந்த நினைவுக்குறிப்புகளில் இருவரும் தலைச்சிறந்த புரட்சி வீரர்களாக, தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்திற்கு வளைந்து கொடாது போராடும் போர்வீரர்களாக சிறந்து நிற்கிறார்கள்.         இருவருக்கும் இடையே நிலவிய மகத்தான நட்பு, விஞ்ஞானத் துறையிலும், புரட்சிப் போராட்டத்திலும் அவர்கள் தொடந்து படைப்பாற்றல் அடிப்படையில் ஒத்துழைத்தது போன்றவற்றை இந்நூலில் விரிவாகச் சித்தரித்துள்ளனர்.        இந்நூலில் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் சிந்தனையாளர்கள், மேதைகள், புரட்சியாளர்கள் என்று மட்டுமில்லாமல் ..மிகமிக அழகான பெருமை தரும் மனிதப் பண்புகளின் (ஒழுக்கம், அடக்கம், எளிமை, வாய்மை, வெல்ல முடியாத வெற்றி உணர்வு) இவற்றின் உருவகங்களாகக் க...

வைகை மீன்கள்(வெ.இறையன்பு I A S)

________________________________ வைகை மீன்கள் (வெ.இறையன்பு I A S)  ________________________________        தெளிந்த நீரோடை போன்று, படிப்பவர்கள் புரியும்படியான எளிமையான நடையில், ஹைக்கூ கவிதைகளுக்குரிய சொற்சிக்கனத்துடன் கவிதைகள் உள்ளன.         பிடித்த வரிகளைப் பட்டியலிட்டால் நூல் முழுவதையும் கூறவேண்டும். இன்றைய கல்வி, குழந்தைகளை கிணற்றுத் தவளையாகவே வைத்திருக்கிறது. அப்பதிவு.. பாடப்புத்தகத்தை வேதப் புத்தகமென நீங்கள் நினைத்தால்... நான் நாத்திகன். பள்ளிக்கூடமே தேசமென உங்களுக்கு போதிக்கப்பட்டால்.. குழந்தைகளை, நாடு கடத்துவதற்கு முன்மொழியும் முதல் மனிதன்..         வாசகர்களின் உள்ளக் குளத்தில் நீந்தும் கவிதைமீன்கள் இந்த  "வைகை மீன்கள் "..                   (விலை : ரூ 140)                   (விஜயா பதிப்பகம்)

தமிழாற்றுப்படை(கவிப்பேரரசு வைரமுத்து)

_______________________________ தமிழாற்றுப்படை (கவிப்பேரரசு வைரமுத்து) _______________________________        இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் காலக் கருவூலம்! மூவாயிரம் ஆண்டுகளின் தமிழை ஒரே நூலுக்குள் அடைத்துக் காட்டும் சாகசம்!         இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், திருவள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், வள்ளலார், பாரதியார், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட 24 ஆளுமைகள் மொத்தமாக நம் வீட்டிற்கு விருந்துக்கு வந்து சென்றது போல் உணர்வு ஏற்படும்!         ஒரு நல்ல நீதிபதியின் நேர்மையோடும், ஒரு விஞ்ஞானியின் பார்வையோடும், தர்க்க ஞானத்தின் கூர்மையோடும், ஒளி கொண்ட சொற்களால், வனப்பு மிகுந்த வாக்கியங்களால் எழுதப்பட்டிருக்கும் நூல் இது!         திராவிடத் தொன்மை, தமிழின் தத்துவ மரபு, படைப்பாளிகளின் சமூக அக்கறை குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளால் தமிழர்களின் உயரம் கூடுகிறது!          தமிழுக்கு வரும் ஆபத்தை எதிர்த்து வெல்...

நெல்சன் மண்டேலா(தா.பாண்டியன்)

_________________________ நெல்சன் மண்டேலா (தா.பாண்டியன்) _________________________           தேச விடுதலைக்காக 27ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த சிறப்பும், அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பதவியைத் துறந்த சிறப்பும் நெல்சன் மண்டேலாவுக்கு உண்டு.      வாழ்க்கை வரலாறு நாட்குறிப்புகளின் தொகுப்பு அன்று.அனுபவங்களின் பதிவு!         மண்டேலாவின் வாழ்க்கை நிகழ்வுகள், மனப்போராட்டங்கள், தீர்வுகளை எதிர்நோக்கிய பதட்டங்கள், ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் போன்ற விலைமதிப்பற்ற பாடங்கள் மனித சமுதாயத்திற்குத் தம்முள் குவிந்து நிற்கும் பொருண்மை வாய்ந்தவை!       மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று! மனித சமுதாயத்தில் நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு!        எளியநடையில் ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள்! 📚