சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்(நா.காமராசன்)
_________________________
சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
(நா.காமராசன்)
_________________________
புதுக்கவிதை, வசன கவிதை ஆகிய துறைகளில் தன் சிறப்பை வெளிப்படுத்தியவர்!
கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக்கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்! இவர் ஓர் உருவகக்கவிஞர்!
அழகானக் கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர்! கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்! இவர் அவ்வப்போது எழுதிய எழுத்து மலர்களைத் தொகுத்து, தொடுத்து இலக்கிய மாலையாக்கி உள்ளார்!
"சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் "பொதுவுடைமைக் கருத்துக் கருவூலம்!
"தீமைக்குத் தீயிடுவோம்!
தேவைக்குக் குரல் கொடுப்போம்!
தோழர்கள் ஒன்றானால் உழைப்பே தொழிற்சாலை ஆகிவிடும் "
என்னென்றும் நினைவில் ஆடும் பொன்னூஞ்சல் இந்நூல் 📚
(விலை : ரூ 60)
(கவிதா பதிப்பகம்)
Comments
Post a Comment