Posts

Showing posts from May, 2021

காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன்

______________________________ காலந்தோறும் பெண் (ராஜம் கிருஷ்ணன்) _______________________________         பெண்ணியம் பேசும் பல நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தாலும், ஒரு பெண் ..பெண் அனுபவிக்கும் இன்னல்களை அலசி ஆராய்ந்து எழுதியுள்ள விதம் அருமையுடையது.      பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுத வேண்டும் என்ற படிமத்தை உடைத்து, சமூகத்தில் அல்லறும் மக்களைப் பற்றி எழுத, அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று களப்பணியாற்றி கதை எழுதுபவர்.         இந்நூலில் "பெண்ணுக்கு மட்டும்  "சிறகா? பொன் கூண்டா? "  "வருண பேதங்கள் " "விழிமின்! எழுமின் "உள்பட 26 கட்டுரைகள் உள்ளன.         சங்ககாலம் முதல் மரபு வழியாக பின்பற்றப்பட்டு வந்த பெண் பற்றிய சிந்தனைகளை ..செயல்பாடுகளை.. ஆய்வுக் கட்டுரைகளாக தந்துள்ளார் ஆசிரியர்.       இக்கட்டுரைகள் பெண்களின் வளர்ச்சியை.. வாழ்க்கை விடியலை எண்ணி எழுதப்பட்டது..                  (விலை : ரூ 80)          (நாம் தமிழர் பதிப...

விளிம்பில் - லா.ச.ராமாமிருதம்

__________________________________ விளிம்பில் (லா.ச.ராமாமிருதம்) __________________________________        "விளிம்பில் " என்ற பெயர் இந்நூலுக்கு கனக்கச்சிதம். வாழ்வின் இறுதியில் மரணத்தை எதிர்நோக்கிய நிலையை பிரதிபலிக்கும் பிம்பமே விளிம்பில்..         வயது முதிர்ந்த வாழ்வியல் அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார் லா.ச.ரா அவர்கள்.         முதுமைப் பருவத்தில் வரும் ஞாபக மறதியையே மிக அதிக இடங்களில் பகிர்வு செய்துள்ளார்.  மனைவியுடன் வாழ்ந்த போதும் தனிமையில் தனக்குத்தானே உரையாடும் அனுபவப் பகிர்வு அலாதியான அனுபவத்தை ஊட்டக்கூடியது       தனது வாழ்வியலை தானே அசைபோட்டு.. அதை வாசகனுக்கும் கடத்த முயன்றிருக்கிறார்..                 (விலை : ரூ 40)                 (வானதி பதிப்பகம்)

காகித மலர்கள் - ஆதவன்

_____________________________ காகித மலர்கள் (ஆதவன்) _____________________________         மனிதர்களின் மனப்போக்குகளை ..வேசங்களை.. அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.          70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க்குடும்பங்கள் எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இப்புதினம் வெளிப்படுத்துகிறது.         நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை .. "காகித மலர்கள் " முன் வைக்கிறது.        கதாப்பாத்திரங்கள் போலியான வேடங்களை அணிவதால் அவர்கள் வாசமில்லா காகித மலர்கள். உண்மைக்கு வெகு அருகில் நம்மை அழைத்துச் செல்லும் புத்தகம் இது.                (விலை : ரூ 310)                (உயிர்மை பதிப்பகம்)

பொய்க்கால் குதிரை - டி.செல்வராஜ்

______________________________ பொய்க்கால் குதிரை (டி.செல்வராஜ்) _______________________________         கருப்புதுரை என்ற மெய்ஞ்ஞான சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை படர்க்கை நிலையில் பகரும்வண்ணம் புதினத்தை வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.         சிருங்காபுரி ஜமீன் வாரிசு கருப்புதுரை, முனீஸ்வரன் அவதாரம் தரித்து மெய்ஞ்ஞானச் சித்தராக மாறி பெறும் அனுபவங்களே இக்கதை.       இப்புதினத்தின் தொடக்கம் நகைச்சுவை உணர்வுடன் பயணிக்க வைக்கும் . கதை... புனைவாகத் தோன்றினாலும் பாடுபொருள் கவனம் பெறும்.       அங்கதச் சுவையில் மூடநம்பிக்கைகளைச் சாடும் இந்த  "பொய்க்கால் குதிரை " ஏழுகால் பாய்ச்சலாக விறுவிறுப்பாக ஓடும்வண்ணம் அமைந்துள்ளது.                   (விலை : ரூ 85)         (நியூ செஞ்சுரி புக் ஹவ்ஸ்)

வென்வேல் சென்னி - சி.வெற்றிவேல்

__________________________________ வென்வேல் சென்னி (சி.வெற்றிவேல்) __________________________________         இதுவரை எழுதப்படாத .. மௌரியப் பேரரசன் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு 261 ல் நடைபெற்ற போரே "வென்வேல் சென்னி" என்னும் இப்புதினம்.          கலிங்கப்போர் நடைபெற்ற பிறகு சுமார் ஒன்றரை காலம் கழித்து அசோகர் மதக்கொள்கையை அறிவித்தார்.       பௌத்த மதமாற்றம் நடைபெறும் வரை இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றப் போரே "வென்வேல் சென்னி "..         அசோகன் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்த போன தமிழர்களின் வீர வரலாறே இப்புதினம்...        (விலை : ரூ 850 மூன்று தொகுதி)                  (வானதி பதிப்பகம்)

துளசி தளம்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில் : கௌரி கிருபானந்தன்

__________________________________ துளசி தளம் (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில் : கௌரி கிருபானந்தன்) ___________________________________       இப்புதினத்தை படிக்க கையில் எடுத்தால் கீழே வைப்பது சிரமம்.       ஒருபக்கம் பில்லி, சூன்யம்..ஒருபக்கம் அலோபதி மருத்துவம்..        துளசியின் உடல்நலக்குறைவுக்கு யார் காரணம். அவரவர் மனநிலை மற்றும் அறிவுநிலைக்கேற்ப எதையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் எழுத்து நடை..மற்றும் லாஜிக்..        பில்லி சூன்யத்தைப் பொய்யென சொல்லும் தந்தை.நம்பும் தாய். ஒரு கட்டத்தில் இருவரின் மனநிலையும் மாறுபாடு அடைவது யதார்த்தம்.    காஷ்மோரோ.. காத்ரா..விஷாச்சி.. எண்டமூரியின் சுவாரஸ்யங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இரண்டு பாகங்கள்.                (விலை : ரூ 160,200)                (அல்லயன்ஸ் கம்பெனி)

திருக்குறள் கதைகள் - சாவி

_______________________________ திருக்குறள் கதைகள் (சாவி) _______________________________         உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு 500 பேர்களுக்கு மேல் உரை கண்டுள்ளனர்.         திருக்குறளின் கூறப்பட்டுள்ள கருத்துகள் எல்லா நாட்டினருக்கும், எக்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளன.          திருக்குறளில் உள்ள 7 சீர்களைப் போல, இப்புத்தகத்தில் 7 கதைகள் அடங்கியுள்ளன.        குறள் கருத்துளை மாணவச் செல்வங்களின் மனதில் பதியச் செய்யும் நோக்குடன் இந்நூலை எளிய நடையில், தெளிவாக, அழகு தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர் சாவி அவர்கள். "வள்ளுவன் புகழை வையகம் எங்கும் வாரி இறையடா தமிழா "                 - ஆல்பர்ட் சுவைட்சர்                 (விலை : ரூ 80)                 (மங்கை வெளியீடு)

கனவு ஆசிரியர் - தொகுப்பசிரியர் :க.துளசிதாசன்

_________________________________ கனவு ஆசிரியர் (தொகுப்பசிரியர் :க.துளசிதாசன்) ___________________________________         ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மனதைத் தொட்ட வேறொரு மனிதர் சம்மணம் போட்டு அமர்ந்திருப்பர்.       தமிழ் சமூகத்தின் ஆளுமைகள் தனது ஆசிரியர்கள் பற்றி கூறும் இனிய நினைவு கூறுதலும், தனது கனவு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பற்றியும் கூறும் அருமையான நூல்.       ஆசிரியர் தேர்வு செய்த 18 ஆளுமைகளின் (அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞானி, இறையன்பு, எஸ்.ராமகிருஷ்ணன், ஆயிஷா நடராசன், பவா செல்லதுரை....) வாழ்க்கையில் அவர்களது கனவு ஆசிரியர்களைத் தேடி மலைத்தேனாய் சேகரித்து  "கனவு ஆசிரியர் " என்ற இப்புத்தகத்தை வழங்கி இருக்கிறார்.         19 கட்டுரை ஆசிரியருடையது. 20 வது கட்டுரை ஆப்ரகாம் லிங்கன் தனது மகனுக்காக அப்பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதியது.        ஏராளைமான சிந்தனைகள் கொட்டிக் கிடக்கும் இப்புத்தகத்தை  அனைவரும் அவசியம் வாசியுங்கள்! வாசித்தபின் வாசிப்பை நேசிப்பீர்கள்!!  ...

வெள்ளை யானை - ஜெயமோகன்

__________________________________ வெள்ளை யானை (ஜெயமோகன்) __________________________________         வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பெரிய பெரிய பாளங்களாகக் கொண்டுவரப்பட்ட ஐஸ்கட்டிகளே வெள்ளை யானைகளாக இப்புதினம் முழுவதும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது.         தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும். அவன் மனைவியும் அமெரிக்க நிறுவன கங்காணிகளால்  கொல்லப்பட ..அதை எதிர்த்து வேலை நிறுத்தம் (1878) செய்கிறார்கள் தொழிலாளர்கள். சென்னை ஐஸ்ஹவுசில் நடந்த இந்த போராட்டம்தான் இந்தியாவின் முதல் வேலை நிறுத்தம் என்கிறார் ஆசிரியர்.          இருவர் கொல்லப்பட்டதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அயர்லாந்திலிருந்து இந்தியா வந்த காவல்துறை அதிகாரி "எய்டன் " ..        அவருடைய பார்வையில் அக்கால கட்டமும், சூழலும், மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களாக விரிகிறது..புதினம் முழுவதும்.         ஐஸ்ஹவுசில் வேலை பார்க்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக் கேட்க முனைகிறார் எய்டன். அ...

குழந்தைகள் ஆண்கள் பெண்கள் - சுந்தர ராமசாமி

______________________________ குழந்தைகள் ஆண்கள் பெண்கள் (சுந்தர ராமசாமி) ________________________________       முழுவதும் குடும்பம் சார்ந்த சூழலைக் களமாகக் கொண்டது.        கேரளாவின் கோட்டயத்தில் 1937,38,39 ஆம் ஆண்டுகளில் 5 குடும்பங்களைச் சார்ந்த மனிதர்களிடையே உறவுநிலைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.       அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் .. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகத் தாக்கங்களையும்.. வெளியுலகிற்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும்  ஏக்கங்கள், விம்மல்கள், குமறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் புத்தகம்.         தனது புதினங்களிலேயே முக்கியமானதென்று சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிட்டுளௌளார்.              (விலை : ரூ 650)              (காலச்சுவடு பதிப்பகம்)

கதை கேட்கும் சுவர்கள்(ஷாபு கிளித்தட்டில்)தமிழில்...கே.வி.ஷைலஜா

_______________________________ கதை கேட்கும் சுவர்கள் (ஷாபு கிளித்தட்டில்) தமிழில்...கே.வி.ஷைலஜா ________________________________          இந்தப் புத்தகத்தில் வரும் பெண்களை எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டும்.        25 ஆயிரம் ரூபாய்க்கு தன் மகளை விற்கத் துணிந்த அம்மாவிலிருந்து..ஒரு கடிதம் மூலம் அச்சிறுமியை அழைத்துப் பேசிய அன்னை தெரசா வரை.. அன்பு - வெறுப்பு - ஆசை - வெறுப்பு - கருணை என வாழ்க்கையை வடித்தெடுத்தப் பெண்களை அறியலாம்.        பெண்ணின் வாழ்க்கையை திசை மாற்றுவதில், ஆண்களைவிட பெண்ணின் பங்கே அதிகம்.        பிரேமன் என்ற மனிதன்.ஒரு பெண்ணை பொருளாக பாவிக்கின்ற அற்ப மனம். எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொண்டு இருந்த அச்சிறு பெண்ணின்(உமா) அன்பு அவரை ஒன்றும் செய்யாமலா இருக்கும்.          ஆழ்மனதின் குற்ற உணர்வால் மருத்துவமனையில் இருந்த போது அவர் செய்த செயல் மனிதாபிமானது.           மற்றவர்களின் வாழ்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்நூல் பல செய...

நறுமணம் - இமையம்

_______________________________ நறுமணம் (இமையம்) ________________________________        ஒன்பது சிறுகதைகள் அடங்கிய புத்தகம்.       திருமணமான தோழியர் இருவர் பேசிக்கொள்ளும் கதை "கதவும் வீடும் "ஒருவர் பஞ்சாயத்து தலைவி. மற்றொருவர் அரசுப் பள்ளி ஆசிரியை.      இவர்கள் வாழ்வில்..பணம், சொத்து எல்லாம் இருந்தும் எப்படி ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை இக்கதை காட்டும்.       இதில் உள்ள எல்லா கதைகளும் வெவ்வேறு கதைக் கருவில் இருந்தாலும் அடிநாதமாக இருப்பது பெண்களின் வாழ்வு.இதுவே கதைகளின் மையமாக இருப்பதைக் காணலாம்.        படித்து முடித்தபின் கதை மாந்தர்களிடமிருந்து வெளிவர முடியாமல் மனம் சஞ்சலமடைகிறது.                 (விலை : ரூ 220)                 (க்ரியா வெளியீடு)

சிலேட்டுக்குச்சி - சக.முத்துக்கண்ணன்

_______________________________ சிலேட்டுக்குச்சி (சக.முத்துக்கண்ணன்) _______________________________        17 அத்தியாயங்களும், 112 பக்கங்களும் கொண்ட கட்டுரைத் தொகுப்பு.       இந்நூலின் ஆசிரியர், தான் வகுப்பெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அதே நேரத்தில் தன் இளம் வயதில் மாணவனகாக இருந்தும் எழுதிய அனுபவங்களின் தொகுப்பு.        சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகத் திகழ பள்ளிப் பருவத்தில் அவனுள் விதைக்கப்படும் நற்சிந்தனைகளை அடித்தளம். இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம்.        தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே கல்வி .. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சீரிய சிந்தனையோடும், நேர்த்தியான செயல்பாட்டோடும் அனைத்துத் தடைகளையும் கடந்து வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுத் தருவதே சிறந்த வாழ்க்கைக் கல்வியென பேசுகிறது இந்நூல்.        எல்லா ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய அரிய நூல் இது.              (விலை : ரூ 110)              (பாரதி புத்த...

ஒரு முறைதான் பூக்கும் - ஸ்டெல்லா புரூஸ்

_______________________________ ஒரு முறைதான் பூக்கும் (ஸ்டெல்லா புரூஸ்) ________________________________          சிறுவயதில் தாயை இழந்த கதாநாயகன் மனதில் ஓர் எண்ணம். தான் காப்பாற்றும் விதத்தில் ஒரு பெண் இல்லாமல் ..தன்னைக் காப்பாற்றும் பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்பதே அது..        அவன் கனவு கண்ட கற்பனைப் பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வருகிறாள். சூர்யாவை தன்வயப்படுத்த பல முயற்சிகள் செய்கிறான்.         அந்த அலுவலகத்திலேயே வாய் பேச முடியாத ஒரு பெண் ஆனந்தி பணிபுரிகிறாள். அவள் வைத்தியநாதனை (கதாநாயகன்)  விரும்புகிறாள்.        இந்த முக்கோணக் காதலில் யாருடைய காதல் வெற்றியடைகிறது என்பதை விவரிக்கும் விதம் தான் இப்புதினத்தின் வெற்றிக்கு அடிப்படை.. ஆசிரியரின் முதல் நூல்.                   (விலை : ரூ 50)                   (விகடன் பிரசுரம்)

தி.ஜானகிராமன் - குறு நாவல்கள்

__________________________________ தி.ஜானகிராமன் குறு நாவல்கள் ____________________________________         தமிழ் எழுத்துலகில் தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்ட எழுத்தாளர்.       சிவஞானம், நாலாவது சார், அடி கமலம், அவலும் உமியும், தோடு என்று 6 குறுநாவல்களைக் கொண்டது இந்நூல்.       மனிதனின் நுட்பமான மனநிலையை விவரித்தல், நேரத்திற்கேற்ப மாறுபடும் குணம், உறவுச்சிக்கல்கள்.. தி.ஜாவின் தஞ்சை மண்ணின் மணம் பரப்பும் எழுத்தின் சிறப்பு.       நிகழ்வுகளை கட்டமைத்து சொல்லும் நேர்த்தி, சரளமான நடை, உரையாடல்களை நகர்த்தும் லாவகம் தி.ஜாவின் தனி முத்திரை...                 (விலை : ரூ150)                  (ஐந்திணைப் பதிப்பகம்)

வள்ளுவரும் குறளும் - கி.ஆ.பெ.விசுவநாதம்

________________________________ வள்ளுவரும் குறளும் (கி.ஆ.பெ.விசுவநாதம்) _________________________________       உலக நூல்களில் உயர்ந்த நூலான திருக்குறள் தமிழர்களுக்கு திகட்டாத .. தெவிட்டாத தெள்ளமுது..        உலக வாழ்விற்கு திருக்குறளறிவு மிகமிகத் தேவை. திருவள்ளுவர் கூறும் உவமைகளை எல்லாம் அரிய சிறுகதைகளாகக் கூறி விளக்கி உவமைத்திறனை பாராட்டியுள்ளார் ஆசிரியர்.       முப்பாலிருந்து சில குறள்களை எடுத்துக்காட்டி, அவற்றை  அன்றாட நிகழ்ச்சிகளில் ஒப்பிட்டு விளக்குவது இந்நூலுக்கு அழகு சேர்க்கிறது.       இந்நூலை வாசித்தவர்களுக்கு திருக்குறள் முழுவதும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ள கருத்துப் பெட்டகம்..                  (விலை : ரூ 30)                  (சீதை பதிப்பகம்)