கனவு ஆசிரியர் - தொகுப்பசிரியர் :க.துளசிதாசன்

_________________________________
கனவு ஆசிரியர்
(தொகுப்பசிரியர் :க.துளசிதாசன்)
___________________________________
        ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மனதைத் தொட்ட வேறொரு மனிதர் சம்மணம் போட்டு அமர்ந்திருப்பர்.
      தமிழ் சமூகத்தின் ஆளுமைகள் தனது ஆசிரியர்கள் பற்றி கூறும் இனிய நினைவு கூறுதலும், தனது கனவு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பற்றியும் கூறும் அருமையான நூல்.
      ஆசிரியர் தேர்வு செய்த 18 ஆளுமைகளின் (அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞானி, இறையன்பு, எஸ்.ராமகிருஷ்ணன், ஆயிஷா நடராசன், பவா செல்லதுரை....) வாழ்க்கையில் அவர்களது கனவு ஆசிரியர்களைத் தேடி மலைத்தேனாய் சேகரித்து 
"கனவு ஆசிரியர் " என்ற இப்புத்தகத்தை வழங்கி இருக்கிறார்.
        19 கட்டுரை ஆசிரியருடையது.
20 வது கட்டுரை ஆப்ரகாம் லிங்கன் தனது மகனுக்காக அப்பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதியது.
       ஏராளைமான சிந்தனைகள் கொட்டிக் கிடக்கும் இப்புத்தகத்தை  அனைவரும் அவசியம் வாசியுங்கள்!
வாசித்தபின்
வாசிப்பை நேசிப்பீர்கள்!!
                   (விலை : ரூ 120)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்