Posts

Showing posts from December, 2020

சூல் - சோ.தர்மன்

________________________________ சூல் சோ.தர்மன் ________________________________          அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளை பிரதானப் புனைவுலகாகக் கொண்ட ஆசிரியரின் மூன்றாவது புதினம் இது.         வேளாண்மையோடு,  பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், நவீன அறிவியல் மற்றும் அரசியலில் அவை காணும் வீழ்ச்சி ஆகியவற்றை அந்த நிலத்தின் பச்சையத்தோடு பதிவு செய்கிறது "சூல் " புதினம்.          கண்மாயும், நீரும், வேளாண்மையுமே இப்புதினத்தின் பேசு பொருள்கள்.ஒரே வாசிப்பில் முடிந்துவிடும் அளவிற்கான எளிய மொழிநடை புதினத்தின் பெரும்பலம்.        புதினம் எங்கும்.. கண்மாய் பலமுறை சூலின் வயிற்றோடு உவமை சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது.         சோ.தர்மன் அவர்கள் சொல்ல விரும்புவதும் அதைத்தான். நீர்நிலைகளே இந்த உலகின் உயிர் சுமக்கும் சூல்.. நான்கு விருதுகளைப் பெற்ற நூல் இது.        2019 ஆண்டு சாகித்ய அக...

மாவீரர் மருதுபாண்டியர் - எஸ்.எம்.கமால்

_______________________________ மாவீரர் மருதுபாண்டியர் (எஸ்.எம்.கமால்) ________________________________        கி.பி 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையில் பிரதானியாக இருந்து பரங்கியரோடு போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதர்களது வாழ்வினை, கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் கோர்வையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.         இராமநாதபுர சேதுபதிகளோடு முரண்பட்ட நிலை, பரங்கியரோடு பணிந்தும் எதிர்த்தும் நின்ற நிலைகள் என மருது சகோதரர்களின் அரசியல் நிலைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.          ஆற்றொழுக்கு நடையில் எழுதப்பட்ட ஒரு வட்டார வரலாறு படிப்பவர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும்.             (திருவள்ளுவர் பதிப்பகம்)

வெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி

________________________________ வெந்து தணிந்த காடுகள் (இந்திரா பார்த்தசாரதி) _________________________________          நிலம், நீர், காற்று, கேள்விகள் உயிர் வாழ்வதற்கு அத்தியாயம். கேள்விகளை எதிர்கொள்ள ஒரேவழி விவாதிப்பதுதான்.         வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு புதினம்.          உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களைப் படைத்து அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு நெருப்புப் பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்கியுள்ளார் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.                (விலை : ரூ 150)                (கிழக்கு பதிப்பகம்)

நிகிதா - எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில்...கௌரி கிருபானந்தன்

_____________________________ நிகிதா (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி கிருபானந்தன்)  _____________________________        "த்ரேயம் " என்ற இந்தத் தெலுங்குப் புதினம் பிரபல தெலுங்கு  பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.        இந்தக் கதையின் நாயகி  "நிகிதா " பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்குச் சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறாள்.        சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பது எவ்வளவு அவசியமோ.. உரிய நேரத்தில் அதைச் செயல்படுத்துவதும் அத்தனை முக்கியம் என்பதும், பெற்றோரின் கவனிப்பு சரியாக இல்லாவிட்டால் குழந்தைகள் எப்படி சீர்கெட்டுப் போவார்கள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.        எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அற்புதமானப் படைப்புகளில்  மற்றொரு அதிசயம் "நிகிதா "..                 (விலை : 275)                  (அல்லயன்ஸ் கம்பெனி)

நாயக்கர் மக்கள் - லட்சுமி

______________________________ நாயக்கர் மக்கள் (லட்சுமி) _______________________________         இப்புதினத்தில் வரும் பாத்திரப் படைப்புகள் வெறும் கற்பனைப் படைப்புகள் மட்டும் அல்ல. நம்மிடையே உலவும் பல வேறுபட்ட மன இயல்புடையவர்கள்.          கல்லூரி மாணவியும் அழகியுமான ரேவதி தன் வருங்கால கணவனைத் தேர்ந்தெடுப்பதில் அவசரப்பட்டதால் ஏற்பட்ட அசம்பாவிதமான நிகழ்வுகள் அவளின் வாழ்வை வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறது .         தொடர்ந்து தோல்வியையே சந்திக்கும் அவள் கொடியவளாக மாறுகிறாள்.அதனால் பலரின் வாழ்வு குலைய காரணமாகிறாள்.         சுவையான சம்பவங்களையும், வேறுபட்ட மனப்போராட்டங்களையும் கொண்டு உணர்ச்சிமயமாகப் படைக்கப்பட்ட புதினம் இது.      இப்புதினத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் நம் வாழ்வில் சந்திக்கும் பல மனிதர்களை ஞாபகப்படுத்துவதை வாசிப்பவர் உணர்வர்.                  (விலை : ரூ 200)                  (பூங்கொடி பதிப்பக...

புறநானூறு - புதிய வரிசை வகை - பேராசிரியர் சாலமன் பாப்பையா

______________________________ புறநானூறு - புதிய வரிசை வகை (பேராசிரியர் சாலமன் பாப்பையா) ________________________________         பழந்தமிழரின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு.         இந்நூலினை வரலாற்றுப் பார்வையிலும், இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் வரிசைபடுத்தி உள்ளார்.        இந்நூல் பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது.பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.        புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அருமையான பொக்கிஷம்.        புறநானூற்றை புரிந்து கொள்ள உதவ வேண்டும் என்ற போக்கிலும் இளம் தலைமுறையினர் உள்பட அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும் எழுதப்பட்ட அருமையான நூல்.                  (விலை : ரூ 800)                  (கவிதா பதிப்பகம்)

அனுபவங்கள் தந்த பாடங்கள்(சுதா மூர்த்தி) தமிழில்..சாருகேசி

_______________________________ அனுபவங்கள் தந்த பாடங்கள் (சுதா மூர்த்தி) தமிழில்..சாருகேசி _________________________________         ஒவ்வொரு கட்டுரையும் சிறுகதை போல் உள்ளது.51 கட்டுரைகளும் 51 சிறுகதைகள் போலவே இருகின்றன.        கற்பனை ஏதும் இல்லாத உண்மை அனுபவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் ஆங்கில இதழ்களில் எழுதியவை இக்கட்டுரைகள்.        வாழ்க்கையில் பல பின்னணிகளில் தாம் சந்தித்த மனிதர்களின் மனப்போக்குகளை தெளிவாக, உயிரோட்டதுடன் சிறிதும் பாசாங்கின்றி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வாசிப்பை நேசிப்போம்! சுவாசிப்போம்!!                 (கலைஞன் பதிப்பகம்)

புரிந்ததும் புரியாததும் - வெ.இறையன்பு

______________________________ புரிந்ததும் புரியாததும் (வெ.இறையன்பு) _______________________________         பல்வேறு பரிமாணங்களில் விசாலமான பார்வையை செலுத்தி, புதுப்புது செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வைக்கிறார் இறையன்பு அவர்கள்.       "மனமெல்லாம் மகிழ்ச்சி " "பகட்டும் எளிமையும் " திருமண பந்தம் " "நயத்தகு நாகரிகம் " "பெருந்தன்மை பேணுவோம் " "வெற்றி நிச்சயம் " என்பன போன்ற பத்து தலைப்புகளில் உயர்ந்த கருத்துகளை உலகியல் ரீதியாகவும், உளவியல் பூர்வமாகவும் எடுத்துரைக்கிறார்.        மகிழ்ச்சியின் அளவுகோலை மனமே நிர்ணகிக்கிறது, எது அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அது பகட்டுதான், பகிர்தல் மட்டுமே நம்மை செம்மைபடுத்தும்..போன்ற பல கருத்துகள்  வாசிப்பவரின் உள்ளத்தைக் கவருவதுடன் சிந்தனையைத் தூண்டி வாழ்வைச் சிறப்பிக்க உதவும் தாரக மந்திரமாகத் திகழ்கின்றன.                 (விலை : ரூ 200)                 (கற்பகம் பதிப்பகம்)

அமிர்தம் - தி.ஜானகிராமன்

_________________________________ அமிர்தம் (தி.ஜானகிராமன்) ___________________________________          தி.ஜா அவர்களின் முதல் புதினம் இது.1944 ஆம் ஆண்டு "கிராம ஊழியன் "இதழில் தொடராக வெளிவந்தது.1948 இல் நூல் வடிவம் பெற்றது.         பிந்தய புதினங்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது - ஆண் பெண் உறவில் சக மதிப்பு - பரஸ்பர விழைவு - பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலை சித்தரிப்புகளைக் கொண்டது.         தஞ்சை வட்டார மொழி, கிராமப் பின்னணியில் இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பின் எழுதிய புதினங்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை அமிர்தத்தில் காணலாம்.         சொல்லும் மொழியில் பழமையானதாக இருந்தாலும் பேசும் மொழியில் புதிதாகத் தொனிக்கும் புதினம் இது.                  (விலை : ரூ 200)                  (காலச்சுவடு பதிப்பகம்) 

கண்ணன் பாட்டு (பாரதியார்)

______________________________ கண்ணன் பாட்டு (பாரதியார்) உரை : முனைவர் கமலா முருகன் ______________________________        இந்நூலில் பாரதி 23 தலைப்புகளில் பாடல்கள் பாடியுள்ளார்.        கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலியாக குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி உள்ளார்.       மற்ற தலைப்புகளில் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி காதலன் என்னும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி என்னும் தலைப்பில் 6 பாடல்களையும் பாடியுள்ளார்.       அகத்துறை மரபு  சார்ந்ததாக ..காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக் கண் புதைத்தல் என்ற தலைப்புகளில் பாடல்களை அமைத்துள்ளார்.        சகோதரி முனைவர் கமலாமுருகன் அவர்கள் உரையில் படிக்கும் போது "கண்ணன் பாட்டு " பாடல்களின் பண்ணழகையும், கவிதையழகையும் ரசிக்க முடியும்.                 (விலை : ரூ 50)             ...