சூல் - சோ.தர்மன்

________________________________
சூல்
சோ.தர்மன்
________________________________
         அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளை பிரதானப் புனைவுலகாகக் கொண்ட ஆசிரியரின் மூன்றாவது புதினம் இது.
        வேளாண்மையோடு,  பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், நவீன அறிவியல் மற்றும் அரசியலில் அவை காணும் வீழ்ச்சி ஆகியவற்றை அந்த நிலத்தின் பச்சையத்தோடு பதிவு செய்கிறது "சூல் " புதினம்.
         கண்மாயும், நீரும், வேளாண்மையுமே இப்புதினத்தின் பேசு பொருள்கள்.ஒரே வாசிப்பில் முடிந்துவிடும் அளவிற்கான எளிய மொழிநடை புதினத்தின் பெரும்பலம்.
       புதினம் எங்கும்.. கண்மாய் பலமுறை சூலின் வயிற்றோடு உவமை சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது.
        சோ.தர்மன் அவர்கள் சொல்ல விரும்புவதும் அதைத்தான்.
நீர்நிலைகளே இந்த உலகின் உயிர் சுமக்கும் சூல்..
நான்கு விருதுகளைப் பெற்ற நூல் இது.
       2019 ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் ..
            (விலை : ரூ 380)
            (அடையாளம் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்