Posts

Showing posts from April, 2021

லெனினின் வாழ்க்கைக் கதை - மரியா பிரிலெழாயெவா

_______________________________ லெனினின் வாழ்க்கைக் கதை (மரியா பிரிலெழாயெவா) ________________________________        சோவியத் இலக்கியத்தில் மிகச்சிறந்த நூல் இது.         இந்நூலை வாசிக்கும் போது உள்ளத்தில் பதியும்.. ஒளிமிக்க சித்திரம் படிப்பவரின் மனக்கண்முன் தோன்ற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாக மரியா கூறுகிறார்.        விளாதிமிர் இல்யீச்சின் வாழ்க்கையையும், செயல்களையும் மெய் விவரங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்.         தெளிவானச் சிந்தனையைத் தூண்டும் வகையில், உளப்பூர்வமாக எழுதப்பட்டுள்ள இந்த நவீனம், தலைவர் என்ற முறையிலும் மனிதர் என்ற முறையிலும் லெனினை முழுமையாக, சிறப்பாக சித்தரிக்கிறது.               (முன்னேற்ற பதிப்பகம்)                (மாஸ்கோ)

தமிழ்க்காதல் - வ.சுப.மாணிக்கனார்

________________________________ தமிழ்க்காதல் (வ.சுப.மாணிக்கனார்) _________________________________        ஆசிரியர் தமிழ்ப் புலமையின் மீதும், தமிழ்ப் புலவர்களின் மீதும் கொண்ட விருப்பமே "தமிழ்க் காதல் " என்னும் இந்நூல்.       அகத்திணை ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆசிரியர், தமிழ் இலக்கியங்களில் மூழ்கி.. அதில்  அகத்திணை என்று கூறப்படும் காதல் வாழ்வு குறித்து நுணுகி ஆராய்ந்துள்ளார்.       இந்நூல் அகத்திணை கல்வி பயில்வோரை பண்படுத்தும் தன்மையது. கருத்துகளும், அனுபவங்களும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் கருத்துக் குவியலே இந்நூல்.                 (விலை : ரூ 250)                 (சாரதா பதிப்பகம்)

புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகள் - க.சாந்தகுமாரி

_______________________________ புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகள் (க.சாந்தகுமாரி) ________________________________         மனிதன் வாழ்வாங்கு வாழ தேவையானவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உழைத்து வெற்றி பெற்ற இந்திய விஞ்ஞானிகள் சிலரின் புகழ்பாடும் நூல் இது.        மானுட வெற்றிக்கு பலர் காரணம் என்றாலும் இந்தியாவில் ..ஜெகதீச சந்திர போஸ், பிரபுல்ல சந்திர ரே, ஹோமி ஜஹாங்கீர் பாபா, டாக்டர் சந்திர சேகர் ஆகிய நால்வரின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் நூலே இந்நூல்.       இந்த விஞ்ஞானிகளின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நுட்பமாக தேர்ந்து தொகுத்து, மாணவக் கண்மணிகள் படித்து பயன் பெறத்தக்க வகையில் எளிய நடையில், அழகு தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர்.                  (விலை : ரூ 40)                  (சீதை பதிப்பகம்)

வெல்ல நினைத்தால் வெல்லலாம் - அ.அமல்ராஜ் IPS

________________________________ வெல்ல நினைத்தால் வெல்லலாம் (அ.அமல்ராஜ் IPS) __________________________________            புதிய சிந்தனைகளை, புதிய பாதைகளை, புதிய அனுபவங்களை கட்டுரைகள், கதைகள்,  மேற்கோள்கள் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.          நீங்கள் நினைத்ததை சாதிக்க ..உங்களுக்குள் மறைந்திருக்கும் ..உங்கள் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் வியத்தகு வல்லமைகள் குறித்து அழகாக விளக்கியுள்ளார்.        வாழ்க்கையைக் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும், இலட்சியங்களுடனும் எதிர் கொள்ளும் உங்கள் அனைவரின் வெற்றிப் பயணத்திற்கு இந்நூல் உதவும்.                   (விலை : ரூ 300)                   (விஜயா பதிப்பகம்)

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம்

____________________________ பண்பாட்டு அசைவுகள் (தொ.பரமசிவம்) ____________________________         "அறியப்படாத தமிழகம் " "தெய்வங்களும் சமூக மரபுகளும் " ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளும், சில புதிய கட்டுரைகளும் உள்ளடங்கிய தொகுப்பு.         மண்ணும், மண்ணின் உயிர் வகைகளும், இவற்றினூடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்தும்.        நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் இல்லாமல் தன்ணுணர்ச்சியோடு காண வைக்கும்.        ஆசிரியரின் தெறிக்கும் கருத்துகளும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை.             (விலை : ரூ 100)             (காலச்சுவடு பதிப்பகம்)

புத்தகம் என்பது ... ஈரோடு தமிழன்பன்

_______________________________ புத்தகம் என்பது ... (ஈரோடு தமிழன்பன்) ________________________________         புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட தன் பக்கம் சுண்டி இழுக்கும் ஆற்றல் பெற்ற 122 குட்டிக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.        கவிதைப் புத்தகங்கள் நிறைய உண்டு. இந்நூல் புத்தகம் பற்றிய கவிதைகளைக் கொண்டது. கவிதைகளால் நெய்யப்பட்ட நூல்.       கவிதையின் வெற்றி என்பது படிக்கும் வாசகனையும் பங்காளி ஆக்க வேண்டும்.அந்த வகையில் பல கவிதைகள் இந்நூலுக்கு வெற்றி வாகை சூடியுள்ளன. முதல் கவிதை.. "பத்து பறவைகளோடு பழகி நீங்கள் பறவையாக முடியாது.. பத்து நதிகாளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது.. பத்துப் புத்தகங்களுடன் பழகிப் பாருங்கள் பதினோறாவது புத்தகமாகி படிக்கப்படுவீர்கள்.." எளிய மொழிநடை கவிதைக்கு அழகு தரும். "புத்தகம் படிப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.. ஆனால் அறிவாளிகள் எல்லாம் புத்தகம் படித்தவர்களே..."                    (விலை : ரூ 60)             ...

சோழர் வரலாறு - மா.இராசமாணிக்கனார்

_______________________________ சோழர் வரலாறு (மா.இராசமாணிக்கனார்) ________________________________       தமிழக வரலாற்றை அறிய உதவும் நூல்களில் ஒன்று.      பண்டைய தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் துணை கொண்டு ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது.      முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என்று பாகுபடுத்தக் கூடிய வகையில் மூன்று பாகங்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது.        கரிகாலன் தொடங்கி இராசராசன் இடைப்பட, மூன்றாம் இராஜேந்திர சோழன் இறுதியாக சோழ மன்னர்களின் ஆட்சிமுறை, நாட்டு நிலை, கலைகளின் சிறப்பு, புலவர்காளின் மேன்மை அனைத்தும் புலப்படும் வகையில் எழுதப்பட்ட நூல்...                 (விலை : ரூ 300)          (நாம் தமிழர் பதிப்பகம்)

ஒரு சிறு இசை - வண்ணதாசன்

________________________________ ஒரு சிறு இசை (வண்ணதாசன்) ________________________________        இந்நூலில் 15 சிறுகதைகள் உள்ளன.ஆசிரியரின் 12 வது சிறுகதைத் தொகுப்பு.       அவருக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்களைக் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும் உறவும் அதிகமாகப் பேசப்படுகிறது.         முதுமையின் வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இத்தொகுதியில் உள்ளன.        ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு சிறு இசை ஒலிப்பதை வாசிப்பவர் கேட்க முடியும்.        சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.                 (விலை : ரூ 160)                 (சந்தியா பதிப்பகம்)

எருமைப் பொங்கல் - தி.ஜானகிராமன்

___________________________________ எருமைப் பொங்கல் (தி.ஜானகிராமன்) ____________________________________        தி.ஜா அவர்களின் 10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தினுசாக இருக்கும். முதல்கதை "எருமைப் பொங்கல்" ஒரு எருமைமாடு தன் வாழ்க்கையை இன்னொரு எருமைமாட்டிடம் சொல்வது போல் இருக்கும்.         "நடராசர் கால் " எதையெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டும் மனிதரைப் பற்றியது.        "நடேசண்ணா " கதை ஒரு பாடகரைப் பற்றியது. "மறுபிறவி " என்ற சிறுகதை திருட்டுப் புத்தியுள்ள கோடீஸ்வரர் வீட்டுப்பிள்ளையைப் பற்றியது.         "கடைசி மணி " கதை ஒருநாள் கூத்துக்கு திடீர் தலைமையாசிரியர் ஆன ஒரு ஆசிரியரைப் பற்றி பேசுகிறது.ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ராகம்.         தி.ஜா என்ற கலைஞருடைய அற்புதமான நெஞ்சையள்ளும் நடையழகு வாசிப்பவரை தன்வயப் படுத்தும்.                  (விலை : ரூ 56)                  (ஐந்...

அறிந்தும் அறியாமலும் - சுப.வீரபாண்டியன்

__________________________________ அறிந்தும் அறியாமலும் (சுப.வீரபாண்டியன்) ___________________________________        நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை.. தொழில் நுட்ப ஆற்றலை ..கணிப்பொறியை கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகள் வியந்து போற்றுகின்றன. நாமும் பெருமிதம் அடைகிறோம்.        அதே நேரம்..இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது.         அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை சமூகப் பார்வை கொண்டிருக்கிறதா..           சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன்.. என்ன காரணம்.. விடை தேடுகிறது..விடை தேட வைக்கிறது இந்நூல்.                    (விலை : ரூ 220)    (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

வண்ணநிலவன் சிறுகதைகள்

_________________________________ வண்ணநிலவன் சிறுகதைகள் _________________________________         தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தனுக்கு அடுத்து பல்வேறு உத்திகளைக் கையாண்டு மக்களைக் கவரும் வகையில் எழுதியவர்.          வறுமையில் அவதிப்படும் ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களது சுகதுக்கங்கள், வெளிப்படுத்த முடியாத நேசங்கள் இவற்றை இவர் கதைகளில் பதிவு செய்கிறார்.        "எஸ்தர் " "அயோத்தி " "கரையும் உருவங்கள் " "பாம்பும் பிடாரனும் " போன்ற சிறுகதைகள் இன்றைக்கும் உலகத் தரத்தில் எழுதப்பட்ட படைப்புகளுக்கு இணையாக வைக்கக்கூடியவை.          வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைகள் முழுவதும் உள்ள தொகுப்பு இந்நூல்.               (விலை : ரூ 600)               (நற்றிணை பதிப்பகம்)

சிங்காரவேலரும் பகுத்தறிவும் - நெ.து.சுந்தரவடிவேலு

___________________________________ சிங்காரவேலரும் பகுத்தறிவும் (நெ.து.சுந்தரவடிவேலு) ____________________________________         உலகில் பல கோடி பேர் வாழ்ந்தாலும் ஒரு சிலரே வழிகாட்டியாய் வாழ்கின்றனர். பொதுநலம் பற்றி சிந்திக்கின்றனர்.        இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர் அவர்கள்..         சுதந்திரம், சமதர்மம், சமத்துவம் ஆகிய இம்மூன்றில் ஒன்றை இழந்தாலும் நாம் நல்வாழ்வு வாழ முடியாது.இம்மூன்றையும் இயக்குவது பகுத்தறிவே. அவர் சிறந்த பகுத்தறிவு வாதியாக வாழ்ந்தார். நம்மிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டித்தார்.        பல்துறை கற்று அறிந்திருந்தார்.  தனது நூலகத்தில் 20 ஆயிரம் நூல்களை வைத்திருந்தார்.          இந்நூலில் 14 கட்டுரை மலர்கள் உள்ளன.இவற்றில் "இந்திய கம்யூனிசத்தின் தந்தை " என்னும் கட்டுரை தோழர் நாகை முருகேசன் அவர்களால் எழுதப்பட்டது. மற்ற 13 ம் நெ.து.சு அவர்களால் எழுதப்பட்டது.                  (ரசனா புக் ஹவுஸ...

அகல் விளக்கு - மு.வரதராசனார்

__________________________________ அகல் விளக்கு (மு.வரதராசனார்) __________________________________        சந்திரனும் வேலய்யனும் இளமைக்கால நண்பர்கள். பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின் இருவரும் பிரிந்து விட்டனர்.        சந்திரன் வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது.வேலய்யனின் வாழ்வு சமவெளில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றைப் போன்றது.        நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று செருக்கடைந்து, தாமும் கெட்டு பிறருக்கும் சுமையாக (சந்திரன்) வாழ்வதைவிட.. அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்தப் பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு (வேலய்யன்) வாழ்ந்தாலே போதும் என்ற வாழ்வின் உயர்ந்த குறிக்கோள் இப்புதினத்தைப் படிப்பவர் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உருவாதல் உறுதி..      ஆசிரியர் மு.வ அவர்களின் பொன்னானக் கருத்துகள் கொட்டிக் கிடக்கும் கருத்து கருவூலம் .             இளைஞர்களை கருத்துலகில் ஈர்த்து வாழ்வின் அடிப்படை சிக்கல்களை எண்ணச் செய்யும் நூல்..                  (விலை...

பருக்கை - வீரபாண்டியன்

_________________________________ பருக்கை (வீரபாண்டியன்) _________________________________       கிராமத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் நகரத்தை நோக்கி வரும் இளைஞர்கள் படும்பாட்டை இப்புதினம் சித்தரிக்கிறது.        தற்காலத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை .. கல்லூரியில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப்பதற்கு, விடுதி வசதி இல்லாததை.. விடுதி இருந்தும் சரியான உணவு கிடைக்காமை போன்ற சிக்கலில் சிக்கி.. உணவுக்காகவும், தங்களுடைய பணத் தேவைக்காகவும் பகுதி நேரம் பணி புரிந்துகொண்டு படிக்கும்  மாணவர்களின் நிலைமையை பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறது இப்புதினம்.        சாகித்திய அகாடமி  "யுவ புரஸ்கர் " விருது பெற்ற நூல் இது.              (விலை : ரூ 220)              (பரிசில் புத்தக நிலையம்)

தியாக பூமி - கல்கி

_____________________________ தியாக பூமி (கல்கி) _____________________________         கல்கி எழுதிய சமுதாயப் புதினங்களில் ஒன்று. இப்புதினத்தின் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதை மாந்தர்கள் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.          கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.         தீண்டாமை, பெண் விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை என்ற கருத்துகளை உள்ளடக்கியது.        நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே கல்கி இப்புதினத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.                  (விலை : ரூ 200)                  (சாரதா பதிப்பகம்)

அறிஞர் அண்ணா - கி.வீரமணி

_____________________________ அறிஞர் அண்ணா (கி.வீரமணி) _____________________________         புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரை இந்நூல்.         1993, செப்டம்பர் 21, 22 தேதிகளில் அண்ணா பற்றிய ஆய்வுரையை நூலாக்கம் செய்துள்ளனர்.        பல்கலைக் கொள்கலன் அண்ணாவின் சிறப்பியல்புகளை, சிந்தனை ஆற்றல்களை, அவர்களுடைய தத்துவங்களை எல்லாம் முந்தைய, நிகழ்கால தலைமுறை மட்டும் பெற்றதில்லாமல் வருங்காலத் தலைமுறையும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்த அற்புதமான ஆய்வுரை இந்நூல்..              (விலை : ரூ 25) (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு)