புத்தகம் என்பது ... ஈரோடு தமிழன்பன்
_______________________________
புத்தகம் என்பது ...
(ஈரோடு தமிழன்பன்)
________________________________
புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட தன் பக்கம் சுண்டி இழுக்கும் ஆற்றல் பெற்ற 122 குட்டிக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
கவிதைப் புத்தகங்கள் நிறைய உண்டு. இந்நூல் புத்தகம் பற்றிய கவிதைகளைக் கொண்டது.
கவிதைகளால் நெய்யப்பட்ட நூல்.
கவிதையின் வெற்றி என்பது படிக்கும் வாசகனையும் பங்காளி ஆக்க வேண்டும்.அந்த வகையில் பல கவிதைகள் இந்நூலுக்கு வெற்றி வாகை சூடியுள்ளன.
முதல் கவிதை..
"பத்து பறவைகளோடு பழகி
நீங்கள்
பறவையாக முடியாது..
பத்து நதிகாளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது..
பத்துப் புத்தகங்களுடன் பழகிப்
பாருங்கள்
பதினோறாவது புத்தகமாகி
படிக்கப்படுவீர்கள்.."
எளிய மொழிநடை கவிதைக்கு அழகு தரும்.
"புத்தகம் படிப்பவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல.. ஆனால்
அறிவாளிகள் எல்லாம்
புத்தகம் படித்தவர்களே..."
(விலை : ரூ 60)
(பாரி நிலையம்)
Comments
Post a Comment