செவ்வாழை(அறிஞர் அண்ணா)

_________________________________
செவ்வாழை
(அறிஞர் அண்ணா)
_________________________________
       ஆற்றல் மிக்க நடையில் அமைந்த அண்ணாவின் படைப்புகள் சமூக நலத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை விளக்குவன.அந்த வகையில் அமைந்தது "செவ்வாழை " சிறுகதை.
      தன் வீட்டுக் கொல்லையில் வளர்ந்து வரும் செவ்வாழையை, பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான் செங்கோடன்.
      பண்ணை பரந்தாமன் தனது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமர்சையாகக் கொண்டாட, செங்கோடனின் செவ்வாழை குலையை பண்ணையின் கணக்குப்பிள்ளை கைகாட்ட அது பண்ணையார் வீடு சென்றது.செங்கோடனின் பிள்ளைகள் ஏமாற்றமடைந்து கண்ணீர் விட்டனர்.
     உழைப்புகேற்ற பலன் ஒவ்வொருவருக்கும் கிடைத்து விட்டால் சமூகச் சிக்கல்கள் தீர்க்கப்படும் என்பதை இக்கதையின் மூலம் அறியலாம்,📚
           (விலை. : ரூ 40)
           (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்