Posts

அந்தர் முகம்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்...கௌரி கிருபானந்தன்

_____________________________ அந்தர் முகம் (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி கிருபானந்தன் _______________________________        மனித உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் சுயநலம் எத்தனை விதமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய நடையில் சித்தரித்திருக்கிறார்.        அதைக் கண்டு மனிதர்களை வெறுப்பதும், தனக்குள்ளே ஒடுங்கிப் போவதுமாய் இருந்த நாயகனை "பிரணவி " என்ற சிநேகிதி, அன்பு என்ற மந்திரக்கோலால் அவன் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறாள்.        மனிதர்களிடம் படிந்துவிட்ட மன அழுக்குகளை அலசி ஆராய்வதோடு சுயநலத்தைக் குறைத்துக் கொண்டு, மனித நேயத்தை வளர்த்துக் கொண்டால் இந்த சமுதாயம் சொர்க்கத்திற்கு இணையாய் மாறும் என்ற கருத்துடன் கதை முடிவடையும். எண்டமூரியின் படைப்புகளில் ஓர் புதுமை. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்!                  (விலை : ரூ 215)                 (அல்லயன்ஸ் கம்பெனி)

சரிகை வேட்டி(பாலகுமாரன்)

_______________________________ சரிகை வேட்டி (பாலகுமாரன்) ____________________________________         "சரிகை வேட்டி "  "காதல் வரி " என்ற இரு குறுநாவல்களைக் கொண்ட புத்தகம் இது.          அமெரிக்காவில் இருக்கும் மைத்துனன் வேதமூர்த்திக்கு, அண்ணி குமுதவல்லி பெண் பார்த்து முடிக்கிறாள். அவனுக்குப் அப்பெண்ணை  பிடிக்கவில்லை. வேறு பெண்ணை மணக்கிறான்.         அப்பெண்ணை அண்ணிக்குப் பிடிக்கவில்லை. ஒரே அலட்டல். ஒரு நிலையில் மைத்துனன் இறக்க அவருடைய குழந்தையை வளர்கிறாள் குமுதவல்லி..          "காதல் வரி " புதினத்தில் நாயகி புவனேஸ்வரி அரசு வேலை பார்ப்பவள். ஆனாலும் திருமணத்தில் பல சிக்கல்கள். திருமணம் கைகூடவில்லை. அவள் ஒருவனை (சங்கரராமன்)  விரும்புகிறாள். அவனால் ஏமாற்றப்படுகிறாள். கண்மணித்தாமரை , ஆனந்தயோகம் எழுதிய பாலகுமாரனின் வித்தியாசமான புதினங்கள் இவை..                 (விலை : ரூ 75)                 (விசா பப்ளிகேஷன்ஸ்)

என்றும் பெண்(இந்துமதி)

_________________________________ என்றும் பெண் (இந்துமதி) __________________________________          ஒரு பெண் எத்தனை உறுதியானவளாக இருந்தாலும், விடுதலை விரும்பியாகக் காட்டிக் கொண்டாலும், வீரமானவளாக இருந்தாலும், விவேகமானவள் என்றாலும்.. அவளது உள்மனதில் - மிகமிக ஆழமாகவும், அந்தரமாகவும் அன்பிற்கு ஏங்குபவளாகவே உள்ளாள்.         எதிர்பாராத அன்பு கிடைக்கப் பெறாவிட்டால் .. ஆணிவேராக இருந்தவள் சல்லி வேராகி விடுகிறாள்.         இதைத்தான் "என்றும் பெண் " சொல்கிறாள்.தன் நிலையை விளக்க ஆசைப்படுகிறாள். மெல்லிய உணர்வுகளை புரிய வைக்க முயற்சி செய்கிறாள்.                (விலை : ரூ 210)               (ராஜராஜன் பதிப்பகம்)

மந்திரவாதியின் சீடன்(இவால்ட் ஃப்ளிஸர்)தமிழில்... அசதா

___________________________________ மந்திரவாதியின் சீடன் (இவால்ட் ஃப்ளிஸர்) தமிழில்... அசதா ____________________________________           ஐரோப்பிய கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகப் பிரச்சனைகள் நிறைந்து அல்லாடும் ஒருவர், தன் நாடோடி குருவான இந்திய சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் புல்வெளிகள், லாமா மடாலயங்களில் அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச் செல்லும் பயணமாக இப்புதினம் விரிகிறது.            குளிர் மலையில் ஆன்மீகப் பயணம் ..சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் இப்புதினத்தில் .. தத்துவ வாதங்களும் குறியீடுகளும் பின்னி ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டுள்ளதாக உள்ளது..            ஐரோப்பிய தத்துவத்துடன் இந்திய தத்துவ மரபும், பௌத்தகக் கருத்துகளும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடி இருக்கின்றன.        தத்துவத்தைப் பொதித்து வைத்தும் சுவாரஸ்யமாகக் கதை கூறமுடியும் என்பதற்கு இப்புதினம் ஒரு சான்றாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய புதினம் இது.. ஆழமான கருத்தாக்கங்களைக் கொண்டு...

புதுமைப்பித்தன் சிறுகதைகள்(புதுமைப்பித்தன்)

______________________________ புதுமைப்பித்தன் சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) _______________________________         "கருத்தின் வேகத்தை பிரதானமாகக் கொண்டு, தாவிச் செல்லும் நடை " புதுமைப்பித்தனுக்கே உரியது.       பல சந்தர்ப்பங்களில், பலவேறு மனப்பான்மைகளில் அவர் எழுதியுள்ள பல்வகைப்பட்ட கதைகளில் 16 கதைகளின் தொகுப்பு இந்நூல்.        இவரின் எழுத்து மனிதனையும், அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த, பரந்த நோக்கையும், முதிர்ந்த சிந்தனையையும் உள்ளடக்கியது.         இத்தொகுப்பில், "காஞ்சனை " "சாப விமோசனம் " கடவுளும் கந்தசாமிபிள்ளையும் " "கயிற்றரவு " போன்ற அவருடைய சிறந்த கதைகள் பல உள்ளன.          " இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத்துடிதுடிப்பில்தான் இருக்கிறது " என்ற ஆசிரியரின் கூற்றுக்கு விளக்கமாக இக்கதைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.              (விலை : ரூ 07)(1976 ல்)               (பாரி நிலையம்)

பிஞ்சுகள்(கி. ராஜ நாராயணன்)

_____________________________________ பிஞ்சுகள் (கி. ராஜ நாராயணன்) _____________________________________             இக்குறுநாவலின் கதாநாயகன்  சிறுவன் வெங்கடேசு.. பறவைகளிடம் பரிவு கொண்டவன். அதன் அழகை ரசிப்பவன்.        இயற்கையுடனான சில அனுபவங்கள் .. இயற்கையைப் பற்றிய தொல்லியல் தொன்மங்கள் என கதைப் போகிறது..         இந்நூலில் இடம் பெறும் தேன் கொத்தி, தைலான் பறவை, தாராக் கோழி, தேன்சிட்டு இது போன்ற பல பறவைகளின் பெயர்கள் பலர் அறியாதவை..         இயற்கையை கவனித்து அதை உள்வாங்கி எழுதியுள்ளதால் சுற்றுச்சூழலாளர்கள் கி.ரா விடம் பல விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.. நாமும்தான்..         பறவைகளின் பெயர்கள் நம் நினைவில் பறந்து கொண்டிருந்தால் , பறவைகள் வானில் சுதந்திரமாகப் பறக்கும். இதைத்தான் கி.ரா வின் "பிஞ்சுகள் "  நினைவுபடுத்துகிறது.. இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல் இது... வாசியுங்கள்! இயற்கை இலக்கியச் சோலையில் சற்றே இளைப்பாற வாருங்கள்!!          ...

சேவைக்கு ஒரு சகோதரி(மோனிகாஃபெல்டன்)தமிழில்... அநுத்தமா

_________________________________ சேவைக்கு ஒரு சகோதரி (மோனிகாஃபெல்டன்) தமிழில்... அநுத்தமா __________________________________         எல்லோருடைய அன்புக்கும், பெரு மதிப்புக்கும் உரிய சகோதரி சுப்புலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். மோனிகாஃபெல்டன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை சுவைகுன்றாமல் தமிழாக்கித் தந்துள்ளார் அநுத்தமா அவர்கள்.              "கல்கி" பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த போது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது..          வாழ்க்கையில் துயரமும், துன்பமும் அடைந்து தவிக்க நேரிட்ட மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், தெய்வ பக்தியும் வெற்றியைத் தேடித்தரும் என்பதை சொல்லும் புத்தகம் இது..         விதவைகள் வாழ்வு இழந்துவிட தேவையில்லை.அவர்கள் தாமும் முழுமையாக வாழ்ந்து.. மற்றவர்களையும் கைத்தூக்கி விடலாம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெண் சுப்புலட்சுமி அவர்கள்.       இந்நூலைப் படிப்பவர்களுக்குத் தொண்டின் அருமையும், வலிமையும் புரியும்.      ...