சேவைக்கு ஒரு சகோதரி(மோனிகாஃபெல்டன்)தமிழில்... அநுத்தமா

_________________________________
சேவைக்கு ஒரு சகோதரி
(மோனிகாஃபெல்டன்)
தமிழில்... அநுத்தமா
__________________________________
        எல்லோருடைய அன்புக்கும், பெரு மதிப்புக்கும் உரிய சகோதரி சுப்புலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். மோனிகாஃபெல்டன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை சுவைகுன்றாமல் தமிழாக்கித் தந்துள்ளார் அநுத்தமா அவர்கள்.     
        "கல்கி" பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த போது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது..
         வாழ்க்கையில் துயரமும், துன்பமும் அடைந்து தவிக்க நேரிட்ட மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், தெய்வ பக்தியும் வெற்றியைத் தேடித்தரும் என்பதை சொல்லும் புத்தகம் இது..
        விதவைகள் வாழ்வு இழந்துவிட தேவையில்லை.அவர்கள் தாமும் முழுமையாக வாழ்ந்து.. மற்றவர்களையும் கைத்தூக்கி விடலாம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெண் சுப்புலட்சுமி அவர்கள். 
     இந்நூலைப் படிப்பவர்களுக்குத் தொண்டின் அருமையும், வலிமையும் புரியும்.
             (விலை : ரூ 100)
             (அல்லயன்ஸ் கம்பெனி)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்