Posts

Showing posts from November, 2021

பட்டாம்பூச்சி(ரா.கி.ரங்கராஜன்)

_________________________ பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) _________________________       ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த சுயசரிதை புத்தகம்! ரா.கி.ரங்கராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்!       சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு! சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் மனத்துணிவும், யாருக்கும் பணியாத, அதே சமயம் யாரையும் பகைத்துக் கொள்ளாத அவன் சாமர்த்தியமும் படிப்பவரை வியக்க வைக்கும்!       காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த காவியம்! எத்தனை முறை படித்தாலும் சலிக்காது! 📚     (நர்மதா பதிப்பகம்)

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது(ஜெயகாந்தன்)

________________________________ ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது (ஜெயகாந்தன்) _________________________________         தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய வார்ப்பும், வடிவமும், வனப்பும் வழங்கியவர்.         சிறுகதை இலக்கியத்திற்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவர். ஜெயகாந்தனின் மொத்த சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது ".        ஒரு காலக்கட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும், முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல்.              (விலை : ரூ 325)              (காலச்சுவடு பதிப்பகம்)

கண்டதும் கேட்டதும்(வி.ஜி.சந்தோசம்)

____________________________ கண்டதும் கேட்டதும் (வி.ஜி.சந்தோசம்)  ____________________________       வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க நிறுவனரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம், தனது அனுபவங்களிலிருந்து பெற்ற பல்வேறுவிதமான நல்ல செய்திகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் .        பல சந்தர்ப்பங்களில் அவர் கண்டவை மற்றும் கேட்டவைகளில் இருந்து கிடைத்த, சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைச் சின்னச் சின்ன செய்திகளாக்கி அவற்றைச் சுவைபடக் கூறி இருக்கிறார் .       ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் பின்னர் அந்தக் கோயிலில் அமர்ந்து பாடல்கள் பாடியதையும் இந்நூலில் கூறியுள்ளார்.             (விலை _ ரூ 75)              (வானதி பதிப்பகம்)

சந்திரஹாசம்(சு.வெங்கடேசன்)

____________________________________ சந்திரஹாசம் (சு.வெங்கடேசன்) ____________________________________        சந்திரஹாசம் என்பது சு.வெங்கடேசன் கதையில் க.பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதினம் ஆகும்.        பாண்டியர்களையும், அவர்களின் குல வாளான சந்திரஹாசத்தினைப் பற்றிய புதினம் இது.         இதில் முதல் பாகம் சகோதர யுத்தம்.இத்தொகுப்பு குலசேகர பாண்டியன் மற்றும் அவனது இரு மகன்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் மூவரையும் சுற்றி நடைபெறும் கதையாகும்.        இலங்கைப் போரில் தொடங்கி, மாலிக்காபூரின் வருகையுடன் இந்த பாகம் முடிவு பெறும். மார்க்கோபோலோவின் வருகை பற்றிய குறிப்புகளும் இத்தொகுப்பில் உள்ளன.        முதல் தொகுதி இலங்கைப்போர், அங்குசம், நாகரீகத்தின் முகம், மணிமுடி என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது.        பாண்டியர்களின் குல வாளான சந்திரஹாசத்தின் பட்டுத் தெறிக்கும் ஒளியிலிருந்து ஒரு மகத்தான வீரக் கதை எழுதப்பட்டது. அந்த வீரக்கதையே "சந்திரஹாசம் "     ...

இலக்கியச் சோலை (அறிஞர் அண்ணா)

_________________________ இலக்கியச் சோலை  (அறிஞர் அண்ணா) _________________________       பழந்தமிழகம் செய்தியால் விரிந்ததாகவும், சிறப்பால் ஆழ்ந்ததாகவும், வரலாற்றுச் சான்றுகள் எட்ட முடியாத அளவு உயர்ந்ததாகவும் விளங்குகின்றது!        பழந்தமிழர் மக்களைக் காண அறிஞர் அண்ணா அவர்கள் புறநானூறு, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், திருக்குறள், முல்லைப்பாட்டு ஆகிய சங்க கால நூல்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இந்நூலின் மூலமாக!      இலக்கியச்சோலையில் புகும் நாம், அவர் காட்டும் வழியினை _ நெறியினை போற்றிப் புகழ்வதோடு, நடைமுறையில் கொண்டு, நம் வாழ்வினை விழுப்பம் உடையதாக ஆக்கிக் கொள்வோம்!       இந்நூலில் பன்னிரெண்டு கட்டுரைகள் உள்ளன! அத்தனையும் முத்துகள்!       அனைவரும் அண்ணாவின் இலக்கியச்சோலையில் புகுந்து, இலக்கியச் சுவையை பருகவேண்டும்! 📚   (பூம்புகார் பதிப்பகம்)

அமுதும் தேனும்(உவமைக் கவிஞர் சுரதா)

_______________________________ அமுதும் தேனும் (உவமைக் கவிஞர் சுரதா) ________________________________       இந்நூல் வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு.       இந்தக் கவிதைப் பூங்காவில் மங்கையும் மாவீரனும், கண்ணீர் நதி, அமுதும் தேனும், வெந்நீரில் வெந்தவன் உள்பட ஏழு வகையான வரலாற்றுக் கவிதைப் பூக்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன.      வரலாற்றுக் கவிதைகள் வெளிவந்தால் அதன்மூலம் வரலாறு வெளிச்சம் பெறும்.       இந்த அடிப்படையில் கவிஞர் தாம் நடத்தி வந்த காவியம், இலக்கியம், ஊர்வலம், சுரதா ஆகிய இதழ்களில் வரலாற்றுக் கவிதைகள் எழுதி வந்தார். இது நூலாக வெளிவந்துள்ளது.📚           (விலை: ரூ 25)           (சீதை பதிப்பகம்)

சிவகாமியின் சபதம்(கல்கி)

______________________________ சிவகாமியின் சபதம் (கல்கி) _______________________________         கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின் புதினமாக வெளியிடப்பட்டது.       முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்மபல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறான்.        காஞ்சியில் ஏற்பட்ட போர்ச்சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்கிய நாட்டில் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர்கள் போர் தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.       பலருடைய கவனத்தை ஈர்த்த இப்புதினம் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிஷீவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.  இந்நூலை வாசிப்பவர்கள் பல்லவர் கால குடிமக்களில் ஒருவராகவே மாறிவிடுவர்..                   (சாரதா பதிப்பகம்)

விஜயம்(வ.ரா) வ.ராமசாமி

________________________________ விஜயம் (வ.ரா) வ.ராமசாமி _________________________________       ஒரு விதவைக்கு மறுமணம் நடக்கவில்லை என்றால் என்ன நேரும் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லும் பிரச்சார நாவல் "விஜயம் "       வ.ரா என்ற கலைஞனை இதில் பார்க்க முடியாது.சமூகத்தின் அவலங்களுக்காகக் கூக்குரலிடும் சிந்தனையாளனை இதில் காணலாம்.        விஜயத்தில் சில கிளைக் கதைகள் உண்டு.ஒவ்வொன்றும் சமுதாயத்தில் நடந்த உண்மைக் கதைகளே.இதைத் தவிர தாகூரின் "வீடும் வெளிச்சமும் "டால்ஸ்டாயின் "அன்ன கரினினா "போன்ற கதைகளின் சுருக்கங்களையும் வ.ரா என்ற சிந்தனையாளனின் நோக்கில் தரப்பட்டுள்ளது.இது அவரின் பரந்த படிப்பைக் காட்டுகிறது.            (அல்லயன்ஸ் கம்பெனி)

ஆகாயத்திற்கு அடுத்த வீடு(மு.மேத்தா)

________________________________ ஆகாயத்திற்கு அடுத்த வீடு (மு.மேத்தா) _________________________________      ஆசிரியர் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. 2006 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது இந்நூலுக்கு.       பல ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான அவருடைய கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.        குற்றப்பத்திரிகை, வழுவமைதி, ஞானம், மனக்கதவு, கடலுடன் ஒரு கலந்துரையாடல், வெற்றியின் மறுபக்கம் உள்பட 49 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.       மதிப்பீடு : "எழுதிக் கொண்டிருந்தான் விமர்சனங்கள் வந்தன! எழுதாமல் இருக்கிறான் விருதுகள் வந்தன!" துணிச்சலாக கருத்துகளை சொல்பவர்.    எளிமையான சொற்களில், ஆழமான கருத்துகளை அசத்தலான வெளிப்பாடாகச் சொல்வது கவிஞரின் தனிச்சிறப்பு.           (விலை : ரூ 70)            (கவிதா வெளியீடு)

கதவுகள் காப்பதில்லை(குலோத்துங்கன்)

______________________________ கதவுகள் காப்பதில்லை (குலோத்துங்கன்) ________________________________         தமிழ்மொழியின் இயல்பை அறிந்து, தனது அறிவியல் ஞானம், கவிதை உள்ளம், செயலாற்றும் திறன் மூன்றையும் வெளிப்படுத்தும் விதமாகக் கவிதைகள் உள்ளன.        28 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.பாரதியைப் போல் "வேண்டுவ படைக்கும் ஆற்றல்! விதிக்கொரு விதி செய் திண்மை " வேண்டுதலுடன் தொகுப்பு ஆரம்பம் ஆகும்.சாதனை புரிவது எளிதல்ல என்று குறிப்பிடும் கவிஞர் மனதில் உறுதியுடன் "துன்பம் தவிர்த்த சுகம் தேடேன் " என்று மொழிகிறார்.         "புதிய மடங்கள் : பழைய அதிபர்கள் "கவிதையில் ஒவ்வொரு வரியும் ஓர் ஏவுகணையாக ஏய்த்துப் பிழைப்பவரை நோக்கிப் பாயும்.                     (பாரதி பதிப்பகம்)

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்

_________________________ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் _________________________       கவிஞரின் கவிதைகளையும், திரையிசைப் பாடல்களையும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள்!       29 ஆண்டுகாலம் மட்டுமே வாழ்ந்து என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சனைகளைப் பாடி மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்ட இணையில்லா இனிய கவிஞர்!      இவரின் பொதுவுடைமைத் தத்துவங்களும், சமூக சீர்திருத்தச் சிந்தனைகளும் ஒப்பற்றவை!      இவரது எழுத்துகள் மனித வர்க்கத்தை உயர்த்தக்கூடியவை!    "செய்யும் தொழிலே தெய்வம்! அந்தத் திறமைதான் நமது செல்வம்! "      (கற்பகம் புத்தகாலயம்)

காவியப்பாவை(முடியரசன்)

_________________________ காவியப்பாவை (முடியரசன்) _________________________          என்றுமுள தென்தமிழில், இயம்பும் இசைநூலாகச் சீரிய, கூரிய, தீஞ்சொற்களால் சிறந்து விளங்குவாள் இந்தக் காவியப்பாவை!          இப்பாவை அழகில் தேவமனோகரி! அறிவில் சரசுவதி! இவள் இசை உலகில் மோகனப் புன்னகையோடு  அம்சத்தொனிக் குரலால் தர்பார் நடத்துவாள்!       இவள் குரலுக்கு யாழும், குழலும், முழவும் இசையும்! இந்த ஏமவதி என்றென்றும் கல்யாணி!       இவள் இசைக்கு யாவரும் வசந்தான்! 📚     (தமிழ்மண் பதிப்பகம்)

பிரார்த்தனை(எண்டமூரி வீரேந்திரநாத்)

_______________________________ பிரார்த்தனை (எண்டமூரி வீரேந்திரநாத்)  ________________________________          "ராபின்குக் "எழுதிய "பீவர் " என்ற நாவலின் பாதிப்புடன் எழுதப்பட்ட இப்புதினம் கேன்சர் நோயைப் பற்றியும், அதைப் போக்கடிக்கச் செய்யும் முயற்சிகளைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறது.          மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று கூட்டாக இருந்து உண்மையான ஆராய்ச்சிகளை அழுத்தி விடுகின்றன என்பதையும், கலப்பட மருந்துகளின் மோசடியால் நிகழும் ஆபத்தையும், மோசடி செய்து மக்களைச் சுரண்டும் முதலாளித்துவ கொடுமையால் நிகழும் அவலத்தையும் சித்தரிக்கும் புதினம்.        மருத்துவ ரீதியாக மனிதன் முன்னேற்றம் அடைந்துவிட்டாலும், மனிதநேயத்தை வளர்த்துக் கொள்வதில் இன்னமும் தயக்கம் காட்டுகிறான்.           எந்த எழுத்தானாலும் ஊகிக்க முடியாத வகையில் யதார்த்தமாக ..சிறிது கற்பனையுடன் ஆசிரியர் உருவாக்கிய காவியம்  "பிரார்த்தனை "             (விலை : ரூ 175)       ...

எரிமலை(அறந்தை நாராயணன்)

_________________________________ எரிமலை (அறந்தை நாராயணன்) __________________________________        மார்க்சிய சித்தாந்தத்தை தனது படைப்புகளில் எழுதி முத்திரை பதித்தவர் ஆசிரியர்.         சமூகத்தில் பொருளாதாரச் சுரண்டல்களையும், கயமைத்தனங்களையும், கொடுமைகளையும் வெளிச்சமிட்டு வெளிக்கொணரும் சமூக கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புதினம் இது.           முதலாளி முன் கைக்கட்டி, வாய்ப்பொத்தி, காலமெல்லாம் உழைக்கும் ஏழைகள் ஏய்க்கப் படுகிறார்கள்.அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் இளைஞன்.. அவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு போராட்டம் செய்கின்றனர்.        சமூகநீதி, வர்க்க நியாயம் வேண்டிப் போராடுவதில் எத்தனை எதிர்பார்ப்புகள்..எத்தனை இழப்புகள் நேரிடுகிறது என்பதனை நாடகம் கதையாகப் பின்னிச் செல்கிறது.         பெயர்கள் கற்பனை..சம்பவங்கள் உண்மை என்கிறார் ஆசிரியர் முன்னுரையில்.. புதுமையும், எழுச்சியும், நெகிழ்ச்சியும் மிக்க படைப்பு..            (விலை : ரூ 13 ..(1991 ல்)     ...

கல்லுக்குள் ஈரம்(சு.நல்லபெருமாள்)

_________________________________ கல்லுக்குள் ஈரம் (சு.நல்லபெருமாள்) _________________________________       சுதந்திரப் போராட்ட காலத்தை களமாக வைத்து எழுதப்பட்ட நூல் இது!       அகிம்சைக்கும், தீவிரவாதத்திற்கும் நடக்கும் போராட்டத்தை வெகு அழகாக சித்தரிக்கும் கதை! கல்கி வெள்ளிவிழாவில் இரண்டாம் பரிசு பெற்ற நூல்!      சுதந்திரப் போராட்ட வரலாற்றை, வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்கள் நடமாடிய காலத்தோடு பின்னிப் பிணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர் அவர்கள்!       சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் அறியாத இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது! கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராது!                (வானதி பதிப்பகம்)

மணிபல்லவம்(நா.பார்த்தசாரதி)

_______________________________ மணிபல்லவம் (நா.பார்த்தசாரதி) _______________________________      கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த சரித்திர நாவல்! புகார் நகரில் கொண்டாடப்படும் இந்திரவிழா நிகழ்வில் மல்யுத்தப் போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெறும் இளங்குமரனே கதையின் நாயகன்!     அவனை சுரமஞ்சரி, முல்லை என்ற இரு பெண்கள் விரும்புகின்றனர்! இவர்களின் அன்பையும் நாயகன் ஏற்கவில்லை! இருவரும் அவனுக்காக தியாகம் செய்ய தயாராயிருந்தனர்!      வீரனாக இருந்த இவன், ஞானமே உண்மையான வீரம் என்பதைக் கற்றுணர்ந்து சான்றோனாக மாறுகிறான்! இக்கதையில் இடம் பெறும் சமய, தத்துவ வாதங்கள் மற்றும் சுவையான தகவல்கள் வழக்கமான சரித்திரப் புனைவுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது!     வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலையையும் அமைத்துக் கொண்டு அழகும், ஆழமும் மிகுந்த ஒரு கதையை புனைந்திருக்கிறார் நா.பா அவர்கள்!!                (விலை _ ரூ 650)               ...

அதே இரவு அதே வரிகள்(எஸ்.இராமகிருஷ்ணன்)

__________________________________ அதே இரவு அதே வரிகள் (எஸ்.இராமகிருஷ்ணன்) __________________________________       ஆசிரியர் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்ந்தெடுத்த தொகை நூல் இது!        நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு பெற்றவர்களின் ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழி பெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன!        இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹோ, குந்தர் கிராஸ், மிலன் குந்தேரா, ஏ.கே.இராமானுசர் உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன!        இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும், கருத்தாக்கமும், மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகின்றன! உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக் காட்டுகிறது!             (விலை _ ரூ 220 )              (உயிர்மை பதிப்பகம்)

கவிதா(சுப.வீரபாண்டியன்)

__________________________________ கவிதா (சுப.வீரபாண்டியன்) __________________________________       ஆசிரியரின் மூன்றாவது புதினம்!         பல்வேறு வேறுபாடுகளும், ஆணாதிக்கமும் நிறைந்த இந்தச் சமூகத்தில், அவற்றை ஈவு இரக்கம் ஏதுமின்றி எதிர்த்திட வேண்டும் என்பதில் சுப.வீ அவர்கள் கொண்டிருக்கும் மன உறுதியின் மறுவெளிப்பாடே இப்புதினம்!       கருத்துகளையும், கோட்பாடுகளையும் கதையாக்குவதில் உரிய கவனம் கொண்டிருக்கிறார்! கதைத் தன்மை குறையாத இப்புதினம், பல பாடங்களைப் படிப்பவருக்கு கற்பிக்கும்!!           (விலை _ ரூ 95)           (வானவில் புத்தகாலயம்)

எது நாகரிகம்(மாக்சிம் கார்க்கி)தமிழில் _ தி.க.சிவசங்கரன்

_________________________ எது நாகரிகம் (மாக்சிம் கார்க்கி) தமிழில் _ தி.க.சிவசங்கரன் _________________________       முற்போக்கு இலக்கியத்தின் தந்தையான கார்க்கியின் மூன்று கட்டுரைகள் இந்நூலில் தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது!      எது நாகரிகம்?, கலாச்சாரத்தைப் பற்றி, குடியரசுக் கோமான் என்பன அவை!        பாசிஸக் கலாச்சாரத்தையும், பாட்டாளியின் கலாச்சாரத்தையும் அற்புதமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்!       முதலாளித்துவ உலகம் வறுமையிலும், பசியிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் ஆழ்ந்து தத்தளிக்கையில், சோவியத் யூனியனில் ஒரு புதிய மனித வர்க்கம், புதிய கலாச்சாரம், புதிய நாகரிகம் உருவாகிச் செழிப்பதை, பரவசம் தரும் முறையில் கார்க்கி சித்தரித்திருக்கிறார்!       மனிதனின் உழைப்பை இசைக்கின்ற "பாட்டாளியே உலகின் எஜமான் "என்ற சங்கநாதம் செய்கின்ற இவருடைய எழுத்துகள் புதிய தமிழ் இலக்கியத்தை உருவாக்கத் துணை செய்வனவாகும்!! 📚