சந்திரஹாசம்(சு.வெங்கடேசன்)

____________________________________
சந்திரஹாசம்
(சு.வெங்கடேசன்)
____________________________________
       சந்திரஹாசம் என்பது சு.வெங்கடேசன் கதையில் க.பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதினம் ஆகும்.
       பாண்டியர்களையும், அவர்களின் குல வாளான சந்திரஹாசத்தினைப் பற்றிய புதினம் இது.
        இதில் முதல் பாகம் சகோதர யுத்தம்.இத்தொகுப்பு குலசேகர பாண்டியன் மற்றும் அவனது இரு மகன்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் மூவரையும் சுற்றி நடைபெறும் கதையாகும்.
       இலங்கைப் போரில் தொடங்கி, மாலிக்காபூரின் வருகையுடன் இந்த பாகம் முடிவு பெறும்.
மார்க்கோபோலோவின் வருகை பற்றிய குறிப்புகளும் இத்தொகுப்பில் உள்ளன.
       முதல் தொகுதி இலங்கைப்போர், அங்குசம், நாகரீகத்தின் முகம், மணிமுடி என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது.
       பாண்டியர்களின் குல வாளான சந்திரஹாசத்தின் பட்டுத் தெறிக்கும் ஒளியிலிருந்து ஒரு மகத்தான வீரக் கதை எழுதப்பட்டது.
அந்த வீரக்கதையே "சந்திரஹாசம் "
              (விலை : ரூ 999)
              (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்