ஆலமர விழுதுகள் (பி.வி.ஆர்)
ஆலமர விழுதுகள் (பி.வி.ஆர்) ___________ அனந்தராமன் - கோமதி தம்பதியரைத் தலைமையாகக் கொண்ட குடும்பம்.. பெரிய மகன் ரங்கநாதன்,மனைவி சொர்ணத்தின் தன்னலத்தால் தாய் தந்தையரைப் பிரிந்து தனியாகச் செல்கிறான். இரண்டாவது மகன் ராமுவும் மனைவியும் அதே போல் தனியாகச் செல்கின்றனர். மூன்றாவது மகன் மூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் மனம் கவர்ந்தவள் ஜானா (ஜட்ஜ் சதாசிவத்தின் மகள்) கணவன் எஸ்.எஸ்.நாத் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுடன், அவனுக்கு வர வேண்டிய பணத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு.. மகள் சாருவையும், மகன் மனோஜையும் தாய்வீட்டிற்கு அழைக்கும் மூத்த மகள் "சீதா ".. இளைய மகள் மாலதி புற்று நோயால் மறைந்த நிகழ்வு தாயை மிகவும் பாதிக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் அருமை புரியாமல் பிரிந்து சென்ற குழந்தைகள், பல இழப்புகளுக்குப் பின் கூட்டுக்குடும்பத்தில் கிடைக்கும் அன்பு, கருணை, விட்டுக் கொடுத்தல், பகிர்தல் என எல்லா சிறப்புகளையும் உணர்ந்து ஒன்...