உலகை உலுக்கிய வாசகங்கள் (வெ.இறையன்பு)
உலகை உலுக்கிய வாசகங்கள்
(வெ.இறையன்பு)
_________
102 வாரங்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த போதே வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது!
இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் மனதை உலுக்கிவிடும் ஆற்றல் கொண்டது!
ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு,
இந்த நூல் படிப்பதற்கு முன் இருந்த மனநிலைக்கும், படித்து முடித்தபின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே! இது இறையன்பு அவர்களின் வெற்றி!
பத்து நூல் வாசித்த அனுபவம் ஒரு நூலில் கிடைக்கிறது!
"ஆழமாக வாசிப்பது அறிவை வளர்க்கும் "இந்த நூலின் முதல் கட்டுரையின் தலைப்பு!
"உலகின் முதல் புரட்சியாளர் புத்தர் "
"அலெக்ஸாண்டரின் கல்லறை வாசகம் "
இப்படி நூலின் தலைப்பே கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் உள்ளன!
பல்வேறு உலகப்புகழ் ஆளுமையாளர்களின் சிறப்பை, பண்பை, ஆற்றலை கட்டுரைகளின்மூலம் நன்கு உணர்த்தியுள்ளார் ஆசிரியர்!
432 பக்கங்கள் கொண்ட மாபெரும் தகவல் களஞ்சியம்! 📚
(தினத்தந்தி பதிப்பகம்)
Comments
Post a Comment