நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை(பவா செல்லத்துரை)
______________________________ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (பவா செல்லத்துரை) _________________________________ தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லி பவா அவர்களின், முகம்.. முதலாக , நட்சத்திரங்கள் ஒளித்து கொள்ளும் கருவறை.. ஈறாக 11 சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஒவ்வொரு கதையும் அருமையான சூழலில், வியப்பேற்படுத்தும் மனிதர்களைக் கொண்டு, ரசனையோடு, அழகிய நடையில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர். கதைகளைப் படித்து முடித்தபின் தரும் இதம்.. வசீகர அனுபவங்கள் .. என்றென்றும் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கும். பவா அவர்களின் கதைகள், தமிழ்க் கதை உலகை விரிவாக்குகின்றன.உதயசங்கர் அவர்கள் கூறுவது போல கதைகளை வாசித்து முடித்தவுடன் அழுகையும், கோபமும். கண்ணீரும், ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது என்பதே உண்மை. (விலை : ரூ 100) ...