உப பாண்டவம்(எஸ். இராமகிருஷ்ணன்)

_______________________________
உப பாண்டவம்
(எஸ். இராமகிருஷ்ணன்)
________________________________
      இந்த நவீன நாவல் மகாபாரதத்தின் மீதான ஒரு புனைவாகும்! மகாபாரதக் கதையில் வரும் துணைப் பாத்திரங்களின் வழியாக பாரதத்தைச் சொல்லும் கதையாகும்!
      மகாபாரத்தில் வரும் உப கதாப்பாத்திரங்களின் வழியே அறியாத கதையையும், வெளிப்படுத்தப்படாத துக்கமும் புனைவுருவாக்கம் செய்யப் பட்டுள்ளன!
       எஸ்.ரா. கதை சொல்லும் விதம் சாதாரண அறிவுக்கு எட்டாத, அடங்காத காலத்தின் ரகசியம் போல விரிந்து செல்கிறது!
       எழுத்து என்று நமக்குள் இருக்கும் எல்லைகளின் பிம்பம், சொந்த உருவகங்களில் கரைந்து கரைந்து நாமும் எழுத்தாளரின் பின் தொடரும் நிழலாக வியப்பின் ஆழச் சுழிக்குள் கொண்டு செருகிக் கொள்கிறோம்!
நவீன இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் நூல் இது!
          (விலை : ரூ 375)
          (தேசாந்திரி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்