Posts

Showing posts from May, 2022

விடை தேடும் வினாக்கள்(தமிழருவி மணியன்)

_________________________ விடை தேடும் வினாக்கள் (தமிழருவி மணியன்) _________________________     அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள்,ஆன்மீகக் கருத்துகள்,  சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை, ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார்!      அனைத்து கருத்துகளையும் பல அறிஞர்களின் மேற்கோளுடன் சொல்லியிருப்பதால் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது!     திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் சிறுகதைகள் மூலமாகவும் கருத்துகளை விளக்கி இருப்பது இந்நூலை வாசிக்கும் போது சுவாரசியம் குறையவில்லை!    இறுதிப் பகுதியாக தத்துவ ஞானிகள் பலரது வாழ்க்கைக் குறிப்பு, மனதைக் கவரும் இலக்கியங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூலை சிறப்புடையதாக்குகிறது! 📚       (கற்பகம் புத்தகாலயம்)

பறவைகள் பறக்கின்றன(வாஸந்தி)

____________________________________ பறவைகள் பறக்கின்றன (வாஸந்தி) ____________________________________        சமூக அக்கறையும், நேசமும், மனிதாபிமானமும் நிறைந்த தமிழில் ஆகச்சிறந்த படைப்பாளி வாஸந்தி அவர்களின் அற்புதமான புதினம் இது.         நாயகி ராதாவின் துணைவனாக வந்த ரகு செய்த நீசத்தனத்தால் அவள் வாழ்வு துளிர்க்கவில்லை.         நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வருந்திய அவளின் வாழ்வில் புதுத் தென்றலாய் நுழைந்தாள் குழந்தை கீதா.. அவள் அன்பைப் பார்த்து மெய் சிலிர்கிறான் கீதாவின் தந்தை..          இறுதியில் ராதாவின் மனதில் புயலை உருவாக்க வருகிறான் கணவன் ரகு.. என சம்பவங்களின்  தொடர்புகளோடு புனையப்பட்ட புதினம்.. தலைப்பே தத்துவக் குறிப்பை உணர்த்தும் ..                (விலை : ரூ 70)                (கவிதா பப்ளிகேஷன்)

மரப்பசு(தி.ஜானகிராமன்)

______________________________ மரப்பசு (தி.ஜானகிராமன்) ______________________________      தி.ஜா வின் படைப்புகளில் மிக நவீனமாக நிகழ்காலத்தை நேர்முகமாக எதிர்கொள்ளும் படைப்பு.       கருத்தை முன்நிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு.பூமியில் இருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் "அம்மணி" நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத பாத்திரம்.      அம்மணி மழைத்துளி போல் புதிரானவள்.நதியைப் போல் பழமையானவள்.காற்றைப் போல் சுதந்திரமானவள்.ஆனால் அதே சமயம் சிறகுகள் பாதுகாப்பில் ஒடுங்க நினைப்பவள்.      தனிமையானதனால் உறவுகளைத் தேடி அலைபவள்..      மரப்பசுவாக இருந்தாலும், உயிருள்ள பசுவாக இருக்கும் தனித்துவம் கொண்டவள்..📚              (விலை : ரூ 290)              (காலச்சுவடு பதிப்பகம்)

மகேந்திரவர்மன்(மயிலை.சீனி.வேங்கடசாமி)

_____________________________ மகேந்திரவர்மன் (மயிலை.சீனி.வேங்கடசாமி) ______________________________        ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறுகள் மிகவும் முதன்மையானதாகும்.ஐரோப்பியர் நமது நாட்டிற்கு வந்த பின்னரே, வரலாறு எழுதும் வழக்கம் நமக்கு ஏற்பட்டது.         ஏறத்தாழ கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவ அரச பரம்பரையினர் தொண்டை மண்டலத்தையும், சோழ மண்டலத்தையும் அரசாண்டு வந்தனர்.          மகேந்திரவர்மன் வாழ்ந்த காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் பேரும் புகழும் படைத்த அரசனாக மட்டும் வாழவில்லை.சிற்பம், ஓவியம், காவியம், இசை முதலிய நற்கலைகளைக் கற்ற கலைச் செல்வனாக விளங்கினான்.      முதன்முதலாக தமிழ்நாட்டில் குகைக்கோயில்கள் அமைத்தவன்."மத்தவிலாசப் பிரஹசனம் " என்னும் நாடக நூலை எழுதியவன்."குணபரன், சித்ரகாரப்புலி, விசித்ரசித்தன் " இன்னும் 30 க்கும் மேற்பட்ட சிறப்புப் பெயர்களைப் பெற்றவன்.இவன் அளித்த கலைச்செல்வங்கள் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இவன் புகழ்பாடுகின்...

கௌரி(அநுத்தமா)

__________________________________ கௌரி (அநுத்தமா) ____________________________________           "வெள்ளி மணி " பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்த புதினம் இது.           பணம், காலம், அதிஷ்டம்  என்ற பல காரணங்கள் எதிராக வேலை செய்யினும், வெற்றிகரமான இன்ப மணவாழ்வுக்கு.. கணவன், மனைவி இருவரின் அன்புப் பிணைப்பு மிக மிக அவசியம்.        சந்தேகங்கள் அறவே ஒழிந்தால்தான் பரஸ்பரம் ஏற்படும். கௌரி எல்லா நற்குணங்கள் பெற்றிருப்பினும் கணவன் சுந்தரத்தின் சந்தேக குணத்தால் திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை.          சிலரின் வாழ்வு கோணலாகி போவதற்கு சின்னச்சின்ன விசயங்கள் காரணமாகி விடுகின்றன. தம்பதியர் மனம்விட்டுப் பேசி தெளிந்து வாழ்வை இன்பமயமாக்கலாம் என்ற கருத்தை விளக்கும் புதினம்.                     (விலை : ரூ 160)                     (வாசன் பதிப்பகம்)

உச்சியிலிருந்து தொடங்கு(வெ.இறையன்பு)

___________________________ உச்சியிலிருந்து தொடங்கு (வெ.இறையன்பு) ____________________________        வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு.        அடுத்த நொடி இப்படி இருக்கும் எனச் சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பாய் மாற்றுகிறது.      உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்தித்தாலும், சருகுகளை மிதிப்பதைப் போல கருதிக் கொண்டு துவளாமல் முன்னேறுபவர்கள் தோல்விகளை, வெற்றிக்கு உரமாக்கிக் கொண்டு உயர்கிறார்கள்.        புயல் வீசினாலும் புறமுதுகுக் காட்டாத பாக்கியசாலிகள் அவர்கள்.               (விலை : ரூ 175)               (விஜயா பதிப்பகம்)

பெண்மை வெல்க! (பிரபஞ்சன்)

_________________________ பெண்மை வெல்க!  (பிரபஞ்சன்) _________________________       நாளைய வரலாற்றை உருவாக்குபவர்கள்,  இன்றைய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்!     இன்று என்கிற நிகழ்காலத்தை உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், நேற்றைய வரலாற்றைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும்!     மூதாதையர்களை அறிந்து கொள்ளாத சமூகம் நாளைய இளைய சமுதாயத்தை எடை போடமுடியாது!      இந்நூல் "நேற்றை உணர்த்தும்! இன்றைப் புரியவைக்கும்!  நாளையைத் தட்டி எழுப்பும்! 📚       (கவிதா பதிப்பகம்)

கொம்மை(பூமணி)

____________________________ கொம்மை (பூமணி) _____________________________      மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து, மறுகுரலில் மக்கள் மொழியில் புனையப்பட்ட பெரும் புதினம்.      யமுனையில் படகோட்டிச் சேவை செய்த சத்தியவதி, ஆணாதிக்கத்தால் அலைகழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த அம்பை, தன்னை செயற்கை குருடாக்கி, இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைபிடித்த காந்தாரி, விலைக்கு வாங்கப்பட்ட மாதுரி இன்னும் எத்தனையோ அபலைகள் பற்றி பேசும் நூல் இது.        600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில் மக்கள் மொழியில் உணர்ச்சிப் பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் ஆசிரியர்.                (விலை :ரூ 555)                 (டிஸ்கவரி புக் பேலஸ்)

வாளரி வேந்தன்(ராசிதா)

____________________________________ வாளரி வேந்தன் (ராசிதா) _____________________________________           வரலாறு ஒருவரின்... ஒரு சமூகத்தினரின்... வாழ்க்கை, சாதனை, வேதனை, வெற்றி, பகழ்,  வீரதீரச் செயல்கள் என அனைத்தையும் ஒருங்கே கொண்ட அமைப்பு..           "வாளரி வேந்தன் " என்னும் இப்புதினம் பல்லவர்களின் வரலாற்றைத் தழுவியது. வரலாற்றில் அதிகம் கவனிக்கப்படாத கி.பி 450 இல் நடந்த ஒரு நிகழ்வு..         தொடர் பகையின் காரணமாக நடந்த போரைப் பற்றியும், நட்புக்காக வாளேந்தி நின்று போர் புரிந்த பல்லவர்களின் கதை இது.. 648 பக்கங்களில், 41 அத்தியாயத்தில் பல்லவர்களின் வரலாற்றை அழகான மொழியில்.. ஆற்றொழுக்கு நடையில் ராசிதா அவர்கள் அற்புதமாக வரைந்துள்ளார் .        வாசிப்பை நேசிப்பவர்களுக்கு மற்றுமோர் அதிசயம் .. " வாளரி வேந்தன் "                        (விலை : ரூ 700)                        (சீதை பதி...

இறுதி யாத்திரை(எம்.டி.வாசுதேவநாயர்)தமிழில்...கே.வி.ஷைலஜா

____________________________________ இறுதி யாத்திரை (எம்.டி.வாசுதேவநாயர்) தமிழில்...கே.வி.ஷைலஜா _____________________________________         மரணத்தை உள்ளடக்கிய புனைவு. அப்பாவின் மரணத்திற்கு வாழ்வின் பொருட்டு, தேசத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் வரும் மகன்களின் வழி, கதை சொல்லப்பட்டாலும் எழுத்தாளர் தனியே ஒரு கதாப்பாத்திரமாய் நின்று கதையை நகர்த்துவது சிறப்பு..            கைவிடுதலின் காயங்களை, மௌன உடனிருப்பை மிகத் துல்லியமான மொழிநடையில் சொல்லப்பட்டிருக்கும் புதினம்.             கதை சொல்லிக் கொண்டே போகும்போது திடீரென இறந்த காலத்திற்குள் சஞ்சரிப்பதும்.. நிகழ்கால வாழ்வில் பயணிப்பதுமாக மொழியில் விளையாடியுள்ளார் எம்.டி வி..          மரணங்கள் நமக்குப் பலவற்றையும் சொல்லித் தருகிறது. நம்மை நிதானப்படுத்துகிறது.. ஆற்றுப்படுத்தினாலும் ஆறா ரணமாய் .. வடுவாய் நெஞ்சில் நிலைத்துவிடுகிறது..                 (விலை : ரூ 150)             ...

கதவு திறந்தால்..(லட்சுமி)

__________________________________ கதவு திறந்தால்.. (லட்சுமி) ___________________________________         நமது உள்ளத்தில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் கலைகள்.. பேச்சு, எழுத்து.. இவற்றில் எழுத்து நிலை பேறானது.          "எழுத்தில் அன்பும், பண்பும் திகழ வேண்டும். உயர்ந்த எழுத்தால் மக்கள் சமுதாயத்தை உயர்த்த முடியும் " என்பார் வாரியார். அந்தக் கருத்துக்கு வடிவம் கொடுத்து திகழ்பவை இவரின் எழுத்தோவியங்கள்.          தன் வளர்ப்புத் தாய் (கணவன் சில வருடங்களில் இறந்து விட்டார்)  வசுமதியிடம், பிறந்த சில மாதங்களில்  தன்னைக் கைவிட்ட பெற்றதாய் புனிதாவின் இருப்பிடம் கேட்கிறான் மகன் ஹரி.. பின்னாளில் பணக்காரரை மணந்து நடிகை நிஷாதேவி ஆகிவிட்டாள் புனிதா.           ஒருநாள் பார்க்க அனுமதி வாங்கிக் கொடுத்தாள் வசுமதி.அவன் பெற்றதாயைப் பார்க்கிறான். அவளால் அவமானப்படுத்தப்பட்டு வெளியே வருகிறான். வீட்டிற்கு வந்தால் வளர்ப்புத்தாய் தன் தோழி கனகதுர்காவின் ஆசிரமத்திற்குச் சென்று விடுகிறாள்..       ...

ஒருவழிப் பாதை(சு.சமுத்திரம்)

_____________________________ ஒருவழிப் பாதை (சு.சமுத்திரம்) ______________________________          கிராமிய சூழ்நிலையில் கதை சொல்வதில் வல்லவரான சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய 16 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது.         அனைத்து கதைகளும் சமுதாயத்தில் நிகழும் பல கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதும், அவை தற்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதும் சிறப்பு.        பல்வேறு காலகட்டங்களில், பல இதழ்களில் வெளியான சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து தரப்பட்டிருப்பதால் அனைத்துக் கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது.        இக்கதைகளில் உலாவிய கதாப்பாத்திரங்கள் நமது மனதை சுற்றிக் கொண்டே இருப்பது இக்கதைகளின் சிறப்பு.              (விலை : ரூ 90)              (பாலாஜி பதிப்பகம்)

நல்லதோர் வீணை(அநுத்தமா)

__________________________________ நல்லதோர் வீணை (அநுத்தமா) ___________________________________           தனது துணிச்சலான எழுத்துகள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மௌனமாகவே பெரிய சேவை செய்திருக்கும் இவர் ,எழுத்துலக "பிரம்மா"..         ஒரு கூட்டுக்குடும்பத்தின் மூத்த மருமகள் சியாமிளி.. தாய் தந்தையரை விபத்தில் இழந்து, பின் பெரியப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்ட பெண்.          மாமனார் மார்க்கபந்து , மாமியார் காமாட்சி .. இரு மைத்துனர்கள் அவர்களின் மனைவிமார்கள், மைத்துனர் குழந்தைகள் இரண்டு என்று பெரிய குடும்பர்.எல்லோரும் வேலைக்குச் செல்பவர்கள்.          சியாமளி MA படித்தவள். ஆனால் வேலைக்குச் செல்லவில்லை. மாமியாருடன் குடும்பவேலைகள் ஈடுபட்டு பொறுப்புடன் இருப்பவள். மாமியார் கடுஞ் சொற்கணைகளை அவ்வப்போது வீசினாலும் பொறுமையுடன், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க பாடுபடுகிறாள். வெற்றியும் பெறுகிறாள்..         சியாமளி பாத்திரப்படைப்பு இந்நாவலின் சிறப்பம்சம். வாசிப்பவரின் கவனத்தைக் கவரு...

அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து(பியற்றில் லம்வாகா) தமிழில்.. எம்.ரிசான் ஷெரிப்

____________________________________ அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து (பியற்றில் லம்வாகா)  தமிழில்.. எம்.ரிசான் ஷெரிப்  _____________________________________         ஆப்பிரிக்க பெண் எழுத்தாளர் பியற்றில் லம்வாகா.  12 தலைப்புகளில் இச்சிறுகதைகள் அமைந்துள்ளன.        சிறுகதைகள் அல்ல.. வாழ்வியல் தொகுப்பே இந்நூல்.. ஆப்பிரிக்காவின் உகாண்டா குடியரசில் மக்கள் பட்ட துயரத்தை நம் கண்முன் காட்சி படுத்தும் திரைப்படம்..          "கடவுளின் எதிர்ப்பு ராணுவம் " என்ற பெயரில் உள்நாட்டில் தொடங்கிய போராளிக்குழு ஒன்று உகாண்டாவின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை, குழந்தைகளின் பால்யத்தை என எல்லாவற்றையும் அழித்தது..  அம்மாக்களை புத்தி பேதலிக்க வைத்தது. அப்பாக்களை வெட்டிக் குவித்து நாட்டை சுடுகாடாக்கியது.          பத்து வயதில் கடத்தப்பட்ட குழந்தைகள் பதினைந்து வயதில் திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அதற்குள் அவர்கள்பட்ட வேதனைகளை வாசிக்கும் போது மனம் துயரமடையும். சிறுகதையைப் படிப்பது போல் இல்லாமல் புதினத்தைப் படிப...

தகப்பன்சாமி(வித்யா சுப்ரமணியம்)

_________________________________ தகப்பன்சாமி (வித்யா சுப்ரமணியம்) __________________________________         "தகப்பன்சாமி ", "அன்பிற்கும் உண்டோ... " "உள்ளம் என்பது " உள்பட 21 சிறுகதைகள் கொண்ட நூல் இது.         எழுத்துகள் கூடப் பேசுமா? .. பேசும்.. மனதினுள் உட்கார்ந்து கொண்டு நம்மையே உற்று உற்றுப் பார்க்குமா? .. பார்க்கும்.. ஆசிரியருடைய எழுத்துகளின் வலிமை அது.. ஆன்மீகம் அடிவேர் எனில், விஞ்ஞானம் புதைந்திருக்கும். வாசிக்கும் போது நம் மனம் பல்வேறு உணர்வுகளை அடையும். அன்பு.. ஆனந்தம், ஆரவாரம் இப்படி..        ஒவ்வொரு சிறுகதையும் நம் மனதில் மிகப் பெரிய விருட்சத்தை வைத்திருக்கும் வீரிய விதைகள்.. கதைகள் வாழ்வை செம்மை படுத்துபவை.. இவ்வேலையை இந்த சிறுகதைத் தொகுப்பு உணர்த்தும் என்பதில் இருவேறு கருத்தில்லை..                      (விலை : ரூ90)                      (தேவி வெளியீடு)

மனதுக்குத்தான் கற்பு(இந்திரா சௌந்தரராஜன்)

________________________________ மனதுக்குத்தான் கற்பு (இந்திரா சௌந்தரராஜன்) _________________________________          "மனதுக்குத்தான் கற்பு ", "இன்னும் சில தாஜ்மஹால்கள்", "ஆயிரம் ஜன்னல் மாளிகை" என்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இப்புத்தகம்.            வித்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்பு... ஒவ்வொரு கதையும் மாறுபட்ட  வகையில் வித்தியாசமாக இருக்கும்.            குடும்பச் சிக்கல்களுடன் கூடிய மன உணர்வுகளை அற்புதமாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர். பெண்களின் சிக்கல்களை உளவியல் அடிப்படையில் அணுகி கதை அமைத்துள்ளார்.                   (விலை : ரூ 85)                   (திருமகள் நிலையம்)

இதயம் எழுதிய கவிதை(நாதன்)

_______________________________ இதயம் எழுதிய கவிதை (நாதன்) _______________________________        "இதயம் எழுதிய கவிதை " "இதய தாகம் "என்ற இரண்டு புதினங்களின் தொகுப்பு இந்நூல். நமது இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது.        இப்புதினங்களில் எல்லா கதாபாத்திரங்களும் சந்தர்ப்ப சதுரங்கத்தில் நகர்த்தப்படுகின்ற காய்களாக இருப்பதால், அத்தனை பாத்திரங்களையும், ஆசிரியர் நம்வீட்டு வரவேற்பறைக்கு அழைத்துவந்து நம்மில் ஒருவராகவே ஆக்கிவிடுகிறார் என்ற, கவிப்பேரரசு வைரமுத்துவின் மதிப்பீடு மிகச் சரியானதென்று இந்நூலை வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடியும்.       புதினங்களில் ஒவ்வொரு வரியிலும் கவிதை நயம் மிளிர்வதால் படிக்க சுகமாக இருக்கும்.சிக்கல் இல்லாத, நீரோட்டம் போன்ற எளியநடை, நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு நிகழ்வையும் காட்டுவது போன்ற காட்சி அமைப்பு முதலியவற்றால் சிறப்பு மிக்கதாகிறது.                (விலை : ரூ 300)               ...

மௌரியப்புயல்(உதயணன்)

_________________________ மௌரியப்புயல் (உதயணன்) _________________________        மக்களிடையே பெரும் வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்று வரலாற்று ஈர்ப்பினை வளர்ப்பதாக இருந்து வருவது வரலாற்றுப் புதினங்களே!      கி.மு 300 இல் மௌரியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுப்பை நடத்தியுள்ளனர் என்பதை அறிகிறோம்! தென்னக்கத்தில் படையெடுத்து வந்த மௌரியப்படை மோகூரில் பழையன் என்னும் மன்னனிடம் தோற்றுத் திரும்பிச் சென்றது!       இந்தச் செய்திகள் தான் இப்புதினத்திற்கு கருப்பொருள்! மூன்று பிரிவுகளை உடையது! மூன்றாவது பகுதி அசோகர் கலிங்க நாட்டின்மீது நடத்திய போரினை அடியொற்றி அமைந்துள்ளது! அசோகரால் கலிங்கத்தில் ஏற்பட்ட மௌரியப் புயலுடன் புதினம் நிறைவடைகிறது! 📚                    (விலை : ரூ 450)                    (சீதை பதிப்பகம்)

காசி ஆனந்தன் கவிதைகள்

____________________________ காசி ஆனந்தன் கவிதைகள் _____________________________        ஈழம் தந்த வேழம் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.அவரின் தமிழ், தமிழ் உணர்வு பற்றிய பாடல்கள் கொண்ட தொகுப்பு இந்நூல்.       இவருடைய பாடல் வரிகளில் புயலின் வேகத்தை, பூகம்பக் குலுக்கலை, எரிமலையின் சீற்றத்தை உணரமுடியும்.      "கள மெனில் முழங்கி வரும் ஏறு!  -  தமிழன்        கங்கு கரை பொங்கிவரும்  ஆறு! "       தமிழனின் ஆற்றலை இந்த இரு வரிகள் நன்குப் புலப்படுத்தும்.      நூல் முழுவதுமே கவிதை வரிகள் போர்க்கோலம் பூண்டு வீரநடை போடுகின்றன. எழுத்துகள் அல்ல ; ஈட்டிகள்! வேல்கள்! போர் வாட்கள்!       அவருடைய கவிதைகள் தமிழரைப் புத்துணர்ச்சி கொண்டு எழச் செய்யும் மாமருந்து.  சிந்தனை விருந்து ... தெவிட்டா தெள்ளமுது... "மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல மானம் ஒன்றுதான் அடிப்படை! வெறிகொள் தமிழர் புலிப்படை!  - அவர் வெல்வார் என்பது வெளிப்படை!

யாழினி(பாரதிப்பிரியன்)

___________________________________ யாழினி (பாரதிப்பிரியன்) ____________________________________         சேரர்கள் குறித்து அதிக புதினங்கள் வரவில்லையோ என்று நினைக்கும் நமக்கு, இதோ இப்புதினம் அக்குறையைப் போக்கும்..         ஆண்வாரிசு இல்லாத சேர நாடு.. அதன் வளம் நிறைந்த நெய்தல் நில செல்வச்செழிப்பு.. இவற்றை  ஆள்வதற்கு நடந்த சதிகள் என்ற கற்பனையில் கதை விரிகிறது..           ஒவ்வொரு பெண்ணின் முயற்சிகளுக்கும், நல்ல செயல்களுக்கும் ஓர் ஆண் துணை நின்று ஊக்குவித்தால் பெண்கள் எளிதாக சிகரங்களைத் தொடுவார்கள்..வெற்றிகளைக் குவிப்பார்கள் என்பதற்கு பல்லவ படைவீரன் கந்தமாறனே எடுத்துக்காட்டு ..         புதினத்தின் நாயகி "யாழினி " அவள் தோழி "சிம்மவேணியும் " ஆசிரியர் கூறுவது போல ஒருவர் மாற்றி ஒருவர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக வலம் வருகின்றனர். இது ஆசிரியரின் முதல் நூல்.. முத்தான நூல்... வாசிப்பவரை வசப்படுத்தும் நூல்..                     (விலை : ரூ 280)     ...

யாரும் யாருடனும் இல்லை(உமா மகேஸ்வரி)

____________________________________ யாரும் யாருடனும் இல்லை (உமா மகேஸ்வரி) ____________________________________           தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் (பொன்னையா, அன்னம்மா, 5 மகன்கள், 4 மருமகள்கள், 10 பெயரன், பேத்திகள், வேளையாட்கள் 5 பேர்) நடக்கும் சம்பவங்கள், மனித உறவுகளின் சிக்கல்கள், உள் மனங்களில் கசிந்து கொண்டிருக்கும் துக்கம் முதலியவற்றை அழகு தமிழில் விவரிக்கும் புதினம்.            மகன்களின் வேலைகள், மருமகள்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், குழந்தைகளின் விளையாட்டு இவையெல்லாம் ரசிக்கும்படி உள்ள புத்தகம் இது..            இந்நூலை வாசிப்பவர் படித்து முடிக்கும் வரை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலம் வருவர்.அவர்கள் ஏலக்காயின் நறுமணத்திலும், வண்டி இழுக்கும் மாடுகளின் குழம்பொலியும், விடியும் போது எழுப்பும் பறவைகளின் இன்னிசையிலும், வீட்டுமுன் உள்ள முல்லைப்பூவின் வாசத்திலும் தன்னை மறப்பர்.            கூட்டுக்குடும்பத்தை சீராக இயக்கச் செய்யும் மாமியார் அ...