நல்லதோர் வீணை(அநுத்தமா)
__________________________________
நல்லதோர் வீணை
(அநுத்தமா)
___________________________________
தனது துணிச்சலான எழுத்துகள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மௌனமாகவே பெரிய சேவை செய்திருக்கும் இவர் ,எழுத்துலக "பிரம்மா"..
ஒரு கூட்டுக்குடும்பத்தின் மூத்த மருமகள் சியாமிளி.. தாய் தந்தையரை விபத்தில் இழந்து, பின் பெரியப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்ட பெண்.
மாமனார் மார்க்கபந்து , மாமியார் காமாட்சி .. இரு மைத்துனர்கள் அவர்களின் மனைவிமார்கள், மைத்துனர் குழந்தைகள் இரண்டு என்று பெரிய குடும்பர்.எல்லோரும் வேலைக்குச் செல்பவர்கள்.
சியாமளி MA படித்தவள். ஆனால் வேலைக்குச் செல்லவில்லை. மாமியாருடன் குடும்பவேலைகள் ஈடுபட்டு பொறுப்புடன் இருப்பவள். மாமியார் கடுஞ் சொற்கணைகளை அவ்வப்போது வீசினாலும் பொறுமையுடன், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க பாடுபடுகிறாள். வெற்றியும் பெறுகிறாள்..
சியாமளி பாத்திரப்படைப்பு இந்நாவலின் சிறப்பம்சம். வாசிப்பவரின் கவனத்தைக் கவரும். இவரின் கதைகள் பலரின் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நல்ல இலக்கியத்தின் வெற்றியல்லவா இது. வாசியுங்கள்..
பல சிக்கல்களுக்கு உளவியல் ரீதியான தீர்வு உண்டு.
(விலை : ரூ 210)
Comments
Post a Comment