தகப்பன்சாமி(வித்யா சுப்ரமணியம்)
_________________________________
தகப்பன்சாமி
(வித்யா சுப்ரமணியம்)
__________________________________
"தகப்பன்சாமி ", "அன்பிற்கும் உண்டோ... " "உள்ளம் என்பது " உள்பட 21 சிறுகதைகள் கொண்ட நூல் இது.
எழுத்துகள் கூடப் பேசுமா? .. பேசும்.. மனதினுள் உட்கார்ந்து கொண்டு நம்மையே உற்று உற்றுப் பார்க்குமா? .. பார்க்கும்.. ஆசிரியருடைய எழுத்துகளின் வலிமை அது..
ஆன்மீகம் அடிவேர் எனில், விஞ்ஞானம் புதைந்திருக்கும். வாசிக்கும் போது நம் மனம் பல்வேறு உணர்வுகளை அடையும். அன்பு.. ஆனந்தம், ஆரவாரம் இப்படி..
ஒவ்வொரு சிறுகதையும் நம் மனதில் மிகப் பெரிய விருட்சத்தை வைத்திருக்கும் வீரிய விதைகள்..
கதைகள் வாழ்வை செம்மை படுத்துபவை.. இவ்வேலையை இந்த சிறுகதைத் தொகுப்பு உணர்த்தும் என்பதில் இருவேறு கருத்தில்லை..
(விலை : ரூ90)
(தேவி வெளியீடு)
Comments
Post a Comment