அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து(பியற்றில் லம்வாகா) தமிழில்.. எம்.ரிசான் ஷெரிப்
____________________________________
அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து
(பியற்றில் லம்வாகா)
தமிழில்.. எம்.ரிசான் ஷெரிப்
_____________________________________
ஆப்பிரிக்க பெண் எழுத்தாளர் பியற்றில் லம்வாகா.
12 தலைப்புகளில் இச்சிறுகதைகள் அமைந்துள்ளன.
சிறுகதைகள் அல்ல.. வாழ்வியல் தொகுப்பே இந்நூல்.. ஆப்பிரிக்காவின் உகாண்டா குடியரசில் மக்கள் பட்ட துயரத்தை நம் கண்முன் காட்சி படுத்தும் திரைப்படம்..
"கடவுளின் எதிர்ப்பு ராணுவம் " என்ற பெயரில் உள்நாட்டில் தொடங்கிய போராளிக்குழு ஒன்று உகாண்டாவின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை, குழந்தைகளின் பால்யத்தை என எல்லாவற்றையும் அழித்தது..
அம்மாக்களை புத்தி பேதலிக்க வைத்தது. அப்பாக்களை வெட்டிக் குவித்து நாட்டை சுடுகாடாக்கியது.
பத்து வயதில் கடத்தப்பட்ட குழந்தைகள் பதினைந்து வயதில் திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அதற்குள் அவர்கள்பட்ட வேதனைகளை வாசிக்கும் போது மனம் துயரமடையும்.
சிறுகதையைப் படிப்பது போல் இல்லாமல் புதினத்தைப் படிப்பது போன்ற உணர்வைத் தரும் புத்தகம் இது..
(விலை : ரூ 200)
(வம்சி புக்ஸ்)
Comments
Post a Comment