இதயம் எழுதிய கவிதை(நாதன்)
_______________________________
இதயம் எழுதிய கவிதை
(நாதன்)
_______________________________
"இதயம் எழுதிய கவிதை " "இதய தாகம் "என்ற இரண்டு புதினங்களின் தொகுப்பு இந்நூல்.
நமது இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது.
இப்புதினங்களில் எல்லா கதாபாத்திரங்களும் சந்தர்ப்ப சதுரங்கத்தில் நகர்த்தப்படுகின்ற காய்களாக இருப்பதால், அத்தனை பாத்திரங்களையும், ஆசிரியர் நம்வீட்டு வரவேற்பறைக்கு அழைத்துவந்து நம்மில் ஒருவராகவே ஆக்கிவிடுகிறார் என்ற, கவிப்பேரரசு வைரமுத்துவின் மதிப்பீடு மிகச் சரியானதென்று இந்நூலை வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடியும்.
புதினங்களில் ஒவ்வொரு வரியிலும் கவிதை நயம் மிளிர்வதால் படிக்க சுகமாக இருக்கும்.சிக்கல் இல்லாத, நீரோட்டம் போன்ற எளியநடை, நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு நிகழ்வையும் காட்டுவது போன்ற காட்சி அமைப்பு முதலியவற்றால் சிறப்பு மிக்கதாகிறது.
(விலை : ரூ 300)
(பூம்புகார் பதிப்பகம்)
Comments
Post a Comment