இறுதி யாத்திரை(எம்.டி.வாசுதேவநாயர்)தமிழில்...கே.வி.ஷைலஜா

____________________________________
இறுதி யாத்திரை
(எம்.டி.வாசுதேவநாயர்)
தமிழில்...கே.வி.ஷைலஜா
_____________________________________
        மரணத்தை உள்ளடக்கிய புனைவு. அப்பாவின் மரணத்திற்கு வாழ்வின் பொருட்டு, தேசத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் வரும் மகன்களின் வழி, கதை சொல்லப்பட்டாலும் எழுத்தாளர் தனியே ஒரு கதாப்பாத்திரமாய் நின்று கதையை நகர்த்துவது சிறப்பு..
           கைவிடுதலின் காயங்களை, மௌன உடனிருப்பை மிகத் துல்லியமான மொழிநடையில் சொல்லப்பட்டிருக்கும் புதினம்.
            கதை சொல்லிக் கொண்டே போகும்போது திடீரென இறந்த காலத்திற்குள் சஞ்சரிப்பதும்.. நிகழ்கால வாழ்வில் பயணிப்பதுமாக மொழியில் விளையாடியுள்ளார் எம்.டி வி..
         மரணங்கள் நமக்குப் பலவற்றையும் சொல்லித் தருகிறது.
நம்மை நிதானப்படுத்துகிறது..
ஆற்றுப்படுத்தினாலும் ஆறா ரணமாய் .. வடுவாய் நெஞ்சில் நிலைத்துவிடுகிறது..
                (விலை : ரூ 150)
                ( வம்சி புக்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்