யாழினி(பாரதிப்பிரியன்)
___________________________________
யாழினி
(பாரதிப்பிரியன்)
____________________________________
சேரர்கள் குறித்து அதிக புதினங்கள் வரவில்லையோ என்று நினைக்கும் நமக்கு, இதோ இப்புதினம் அக்குறையைப் போக்கும்..
ஆண்வாரிசு இல்லாத சேர நாடு.. அதன் வளம் நிறைந்த நெய்தல் நில செல்வச்செழிப்பு.. இவற்றை ஆள்வதற்கு நடந்த சதிகள் என்ற கற்பனையில் கதை விரிகிறது..
ஒவ்வொரு பெண்ணின் முயற்சிகளுக்கும், நல்ல செயல்களுக்கும் ஓர் ஆண் துணை நின்று ஊக்குவித்தால் பெண்கள் எளிதாக சிகரங்களைத் தொடுவார்கள்..வெற்றிகளைக் குவிப்பார்கள் என்பதற்கு பல்லவ படைவீரன் கந்தமாறனே எடுத்துக்காட்டு ..
புதினத்தின் நாயகி "யாழினி " அவள் தோழி "சிம்மவேணியும் " ஆசிரியர் கூறுவது போல ஒருவர் மாற்றி ஒருவர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக வலம் வருகின்றனர்.
இது ஆசிரியரின் முதல் நூல்..
முத்தான நூல்...
வாசிப்பவரை வசப்படுத்தும் நூல்..
(விலை : ரூ 280)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment