யாரும் யாருடனும் இல்லை(உமா மகேஸ்வரி)
____________________________________
யாரும் யாருடனும் இல்லை
(உமா மகேஸ்வரி)
____________________________________
தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் (பொன்னையா, அன்னம்மா, 5 மகன்கள், 4 மருமகள்கள், 10 பெயரன், பேத்திகள், வேளையாட்கள் 5 பேர்) நடக்கும் சம்பவங்கள், மனித உறவுகளின் சிக்கல்கள், உள் மனங்களில் கசிந்து கொண்டிருக்கும் துக்கம் முதலியவற்றை அழகு தமிழில் விவரிக்கும் புதினம்.
மகன்களின் வேலைகள், மருமகள்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், குழந்தைகளின் விளையாட்டு இவையெல்லாம் ரசிக்கும்படி உள்ள புத்தகம் இது..
இந்நூலை வாசிப்பவர் படித்து முடிக்கும் வரை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலம் வருவர்.அவர்கள் ஏலக்காயின் நறுமணத்திலும், வண்டி இழுக்கும் மாடுகளின் குழம்பொலியும், விடியும் போது எழுப்பும் பறவைகளின் இன்னிசையிலும், வீட்டுமுன் உள்ள முல்லைப்பூவின் வாசத்திலும் தன்னை மறப்பர்.
கூட்டுக்குடும்பத்தை சீராக இயக்கச் செய்யும் மாமியார் அன்னம்மா அனைவர் மனதையும் கவர்வார்.அவர் மறைவுக்குப்பின் குடும்பத்தில் ஏற்படும் பிளவு மனதை நெருடும். வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் இளமை காலத்தில் விளையாட மறந்த விளையாட்டை எண்ணி ஏக்கம் கொள்வர்..
வாசியுங்கள்...
வாசிப்பில் வசப்படுங்கள்..
வாழ்வை வளமாக்குவோம்..
(விலை : ரூ 260)
( வம்சி புக்ஸ்)
Comments
Post a Comment