ஒருவழிப் பாதை(சு.சமுத்திரம்)
_____________________________
ஒருவழிப் பாதை
(சு.சமுத்திரம்)
______________________________
கிராமிய சூழ்நிலையில் கதை சொல்வதில் வல்லவரான சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய 16 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
அனைத்து கதைகளும் சமுதாயத்தில் நிகழும் பல கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதும், அவை தற்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதும் சிறப்பு.
பல்வேறு காலகட்டங்களில், பல இதழ்களில் வெளியான சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து தரப்பட்டிருப்பதால் அனைத்துக் கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது.
இக்கதைகளில் உலாவிய கதாப்பாத்திரங்கள் நமது மனதை சுற்றிக் கொண்டே இருப்பது இக்கதைகளின் சிறப்பு.
(விலை : ரூ 90)
(பாலாஜி பதிப்பகம்)
Comments
Post a Comment