விடை தேடும் வினாக்கள்(தமிழருவி மணியன்)
_________________________
விடை தேடும் வினாக்கள்
(தமிழருவி மணியன்)
_________________________
அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள்,ஆன்மீகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை, ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார்!
அனைத்து கருத்துகளையும் பல அறிஞர்களின் மேற்கோளுடன் சொல்லியிருப்பதால் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது!
திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் சிறுகதைகள் மூலமாகவும் கருத்துகளை விளக்கி இருப்பது இந்நூலை வாசிக்கும் போது சுவாரசியம் குறையவில்லை!
இறுதிப் பகுதியாக தத்துவ ஞானிகள் பலரது வாழ்க்கைக் குறிப்பு, மனதைக் கவரும் இலக்கியங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூலை சிறப்புடையதாக்குகிறது! 📚
(கற்பகம் புத்தகாலயம்)
Comments
Post a Comment