கதவு திறந்தால்..(லட்சுமி)

__________________________________
கதவு திறந்தால்..
(லட்சுமி)
___________________________________
        நமது உள்ளத்தில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் கலைகள்.. பேச்சு, எழுத்து..
இவற்றில் எழுத்து நிலை பேறானது.
         "எழுத்தில் அன்பும், பண்பும் திகழ வேண்டும். உயர்ந்த எழுத்தால் மக்கள் சமுதாயத்தை உயர்த்த முடியும் " என்பார் வாரியார்.
அந்தக் கருத்துக்கு வடிவம் கொடுத்து திகழ்பவை இவரின் எழுத்தோவியங்கள்.
         தன் வளர்ப்புத் தாய் (கணவன் சில வருடங்களில் இறந்து விட்டார்)  வசுமதியிடம், பிறந்த சில மாதங்களில்  தன்னைக் கைவிட்ட பெற்றதாய் புனிதாவின் இருப்பிடம் கேட்கிறான் மகன் ஹரி..
பின்னாளில் பணக்காரரை மணந்து நடிகை நிஷாதேவி ஆகிவிட்டாள் புனிதா.
          ஒருநாள் பார்க்க அனுமதி வாங்கிக் கொடுத்தாள் வசுமதி.அவன் பெற்றதாயைப் பார்க்கிறான். அவளால் அவமானப்படுத்தப்பட்டு வெளியே வருகிறான். வீட்டிற்கு வந்தால் வளர்ப்புத்தாய் தன் தோழி கனகதுர்காவின் ஆசிரமத்திற்குச் சென்று விடுகிறாள்..
        விறுவிறுப்பான பல நிகழ்வுகளையும், சுவாரசியங்களையும் கொண்ட கதை "கதவு திறந்தால் "... 
                   (விலை : ரூ 115)
                   (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்