பள்ளிகொண்டபுரம்(நீல.பத்மநாபன்)

_________________________
பள்ளிகொண்டபுரம்
(நீல.பத்மநாபன்)
_________________________
       அனந்தநாயரின் துக்கம் கலந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்நூலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய, இன்றைய கலாச்சார வரலாறுகள் பின்னிப் பிணைந்துள்ளது!
       மலையாள நாவலாசிரியர்களில் சிலர் தங்களது பிரபலமானப் படைப்புகளில் திருவனந்தபுரம் என்னும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள்!
ஆனால் அவர்களில் ஒருவராலும், தகழி சிவசங்கரபிள்ளையாலோ கூட இந்த நகரின் ஆன்மாவைச் சிக்கென பிடிக்க முடியவில்லை!
       ஆனால், திரு. நீல .பத்மநாபன் என்னும் தமிழ்ப்புதின ஆசிரியருக்குத் தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூர்ண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது என்று மலையாள விமர்சகர் வி.கிருஷ்ணவாரியாரால் பாராட்டப்பட்ட புதினம் இது! 📚
        (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்