கொஞ்சம் ஹைக்கூ..கொஞ்சம் சென்றியு..(சென்னிமலை தண்டபாணி)

_________________________
கொஞ்சம் ஹைக்கூ..கொஞ்சம் சென்றியு..
(சென்னிமலை தண்டபாணி)
_________________________
     ஹைக்கூ கவிதை வாசிப்பது என்பது வாசகர்களுக்கு சுகமான அனுபவம்! படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கும் உணர்த்துவது ஹைக்கூ!
    ஹைக்கூ எழுதுவது ஒரு கலை! அக்கலை கை வரப் பெற்றால் ஹைக்கூ கவிதைச் சிலைகள் பல உருவாகலாம்!
     "மரக்கிளையில் தூளி!
பாடுகிறாள் பாட்டு!
கைகளில் நாற்று! "
கிராமத்தில் நாற்று நடும் பெண்ணையும், மரத்தில் கட்டிய தொட்டிலில், உறங்கும் குழந்தையையும் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகிறது கவிதை!
     "உறங்கும் நேரம்! 
      ஒப்பாரி ராகம்!
      தொலைக்காட்சி நாடகம்! "
இது தொலைக்காட்சி நாடகங்களை சாடும் கவிதை!
இது போல பல கவிதைகளைப் படிக்கும் போது மழைச்சாரல் என மனம் மகிழும்!📚
        (விஜயா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்