விரலோடு வீணை (இந்துமதி)
விரலோடு வீணை
(இந்துமதி)
___________
சிங்காரம்.. அகம்பாவம் மிக்க, சினிமா ஆசை மிக்க மோகனாவை மணந்ததால் அவர் வாழ்வு வீணானது. மகள் ஷைலஜாவை வளர்க்க தாயுமானவர் ஆனார்.
மகளும், மனைவியின் குணத்தைக் கொண்டதனால்.. ஜவுளிக்கடையில் வேலை செய்யும் அவர், கடன் பெற்று மகளின் தேவையை நிறைவு செய்ய வேண்டியதாயிற்று.அவர் மறைந்தபின் அப்பாவின் அருமை புரிகிறது மகளுக்கு..
ஷைலஜா தான் விரும்பிய விஸ்வநாதன், மல்லிகா என்ற தன் அத்தைப் பெண்ணை மணந்ததால் அவர்கள் வாழ வழியில்லாமல் செய்கிறாள்..
இறுதியில் தவறை உணர்ந்து வருந்துகிறாள். மனப்புழுக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள் ..
தன் நிலை அறியாமல் தேவையில்லாதப் பொருளுக்கு ஆசைப்படும் ஒரு பெண்னின் மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டும் புத்தகம் இது..
(விலை : ரூ 248)
(ராஜராஜன் பதிப்பகம்)
Comments
Post a Comment