புதைமணல்(லட்சுமி)

_______________________________
புதைமணல்
(லட்சுமி)
_______________________________
        சம்சார சாகரத்தின் சங்கடங்களை விட்டு சந்நியாசம் வாங்கி, அது ஒத்து வராமல் வீட்டிற்கு வந்து சோம்பேறியாக வாழும் ஊதாரித் தந்தை ..தன் இருமகள்களின் வாழ்விற்காக, தன் மகன்களிடம் பணத்தைக் உறிஞ்சும் தாய்...
      கணவன் வீட்டிற்கு காசு சேர்ப்பதில் குறியாக இருக்கும் தங்கை இருவர்...இந்த அனைவரும் சேர்ந்து அழுத்த, அப்புதைமணலில் இருந்து புத்திசாலித்தனத்தால் தனியே சென்றுவிடும் அண்ணன் மித்திரன்...
         தம்பி சந்திரனோ அப்புதைமணலில் இருந்து மீள முடியாமல், பெற்றோர்களின் பண ஆசையால் தாம் விரும்பிய ரஞ்சிதாவைக் கைவிட்டதோடு நோயாளி மனைவியையும் (சுபாஷினி) பறிகொடுத்து விடுகிறான் . 
         மனைவியின் நினைவுகளுடன் தன் பெண்ணை வளர்த்து ஆளாக்க நினைக்கிறான் சந்திரன்.அத்துடன் கதை நிறைவடையும்.
        பண ஆசையால் ஒரு குடும்பம் எப்படி துன்பப்படுகிறது என்பதை இந்நூல் உணர்த்தும்..
வாசியுங்கள்..ஏதாவது ஒரு கதாப்பாத்திரம் நம்முடன் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படும்.அதுவே நூலின் வெற்றி...
                (விலை : ரூ 60)
                (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்