மீதமிருக்கும் சொற்கள்(அ.வெண்ணிலா)

_________________________________
மீதமிருக்கும் சொற்கள்
(அ.வெண்ணிலா)
__________________________________
          1930 முதல் 2004 முடிய உள்ள காலகட்டத்து பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
         வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்மணி பார்த்தசாரதி, குமுதினி, லட்சுமி, கோமகள், அநுத்தமா போன்ற சிலர் கதைகள் குடும்ப உறவை தாண்டாதவை.
          கால ஓட்டத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. இத்தொகுப்பில் உஷா சுப்பிரமணியனின் "எனக்கும் ஒரு கதையுண்டு " குறிப்பிடப்பட வேண்டிய கதைகளில் ஒன்று.
பாட்டி - அம்மா - பேத்தி என்ற மூன்று தலைமுறை உறவுகள் அலசப்படுகின்றன.
        புலம் பெயரும் இந்திய மேல்தட்டினர் அமெரிக்க மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக இருக்க வேண்டிய அவலம் இவற்றைக் கூறும் காஞ்சனாவின் "கண்ணி " 
வித்தியாசமான தத்துவப் பார்வையுடன் கிருத்திகாவின் "தீராத பிரச்சனை "
ஆண் துணையின்றிப் பிள்ளை வளர்க்கும் அவலத்தைக் கூறும் 
செண்பகம் ராமசாமியின் "சரோஜா தேவியின் கதை "..
     திலகவதியின் "நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் "..
தாமரையின் "அழித்தலும் காத்தலும் ".. என பல கதைகளை உதாரணமாகக் கூறலாம்.
       காலப் பெட்டகமான இந்தப் பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் அடிப்படை..
            (விலை : ரூ 275)
            (நியூ சென்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்