நெப்போலியன்(என்.சொக்கன்)
_______________________________
நெப்போலியன்
(என்.சொக்கன்)
_______________________________
நெப்போலியன் 15 வயதிலேயே சக மாணவர்களைக் காட்டிலும் ராணுவம், போர்முறைகளைப்பற்றி நிறைய படித்து தெரிந்து கொண்டான்.
ராணுவத்தில் உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும்...மிகச் சிறந்த படைத் தளபதியாக வேண்டும்...பல நாடுகளை வெல்ல வேண்டும் என்ற ஆசைகளை வளர்த்துக் கொண்டான்.
1793 ல் தன் 24 ஆம் வயதில் பிரெஞ்ச் ராணுவத்ன் "பிரிகேடியர் ஜெனரல் " பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்..ஜோசஃபினை மணத்தல்..ஆஸ்திரியாவுடன் போர் செய்தல்...வெற்றி பெறுதல்..1804 பிரெஞ்சு பேரரசராக முடிசூடுதல்..ஆஸ்திரிய இளவரசி மேரி லூயிசை இரண்டாம் திருமணம் செய்தல்..
1814 ல் பாரிஸ் நகரம் எதிரிகளால் கைப்பற்றப்படுதல்..எல்பா தீவுக்கு தப்பிச் செல்லுதல்..இங்கிலாந்து அரசிடம் 1815 ல் அடைக்கலம் புகுந்து ஹெலெனாத் தீவில் சிறை வைக்கப் படுதல் ..போன்ற பல செய்திகள் அடங்கிய, நெப்போலியன் என்ற "போர்க்களப் புயல் "பற்றிய நூல் இது.
ஒரே ஒரு முறை நெப்போலியனின் வாழ்க்கைப் படிப்பது, ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை லட்சம் முறை படிப்பதற்குச் சமம்..
(விலை : ரூ 115)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment