பிரார்த்தனை(எண்டமூரி வீரேந்திரநாத்)

_______________________________
பிரார்த்தனை
(எண்டமூரி வீரேந்திரநாத்) 
________________________________
         "ராபின்குக் "எழுதிய "பீவர் " என்ற நாவலின் பாதிப்புடன் எழுதப்பட்ட இப்புதினம் கேன்சர் நோயைப் பற்றியும், அதைப் போக்கடிக்கச் செய்யும் முயற்சிகளைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறது.
         மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று கூட்டாக இருந்து உண்மையான ஆராய்ச்சிகளை அழுத்தி விடுகின்றன என்பதையும், கலப்பட மருந்துகளின் மோசடியால் நிகழும் ஆபத்தையும், மோசடி செய்து மக்களைச் சுரண்டும் முதலாளித்துவ கொடுமையால் நிகழும் அவலத்தையும் சித்தரிக்கும் புதினம்.
       மருத்துவ ரீதியாக மனிதன் முன்னேற்றம் அடைந்துவிட்டாலும், மனிதநேயத்தை வளர்த்துக் கொள்வதில் இன்னமும் தயக்கம் காட்டுகிறான்.
          எந்த எழுத்தானாலும் ஊகிக்க முடியாத வகையில் யதார்த்தமாக ..சிறிது கற்பனையுடன் ஆசிரியர் உருவாக்கிய காவியம் 
"பிரார்த்தனை "
            (விலை : ரூ 175)
            (அல்லயன்ஸ் கம்பெனி)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்