மணிபல்லவம்(நா.பார்த்தசாரதி)
_______________________________
மணிபல்லவம்
(நா.பார்த்தசாரதி)
_______________________________
கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த சரித்திர நாவல்!
புகார் நகரில் கொண்டாடப்படும் இந்திரவிழா நிகழ்வில் மல்யுத்தப் போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெறும் இளங்குமரனே கதையின் நாயகன்!
அவனை சுரமஞ்சரி, முல்லை என்ற இரு பெண்கள் விரும்புகின்றனர்! இவர்களின் அன்பையும் நாயகன் ஏற்கவில்லை! இருவரும் அவனுக்காக தியாகம் செய்ய தயாராயிருந்தனர்!
வீரனாக இருந்த இவன், ஞானமே உண்மையான வீரம் என்பதைக் கற்றுணர்ந்து சான்றோனாக மாறுகிறான்! இக்கதையில் இடம் பெறும் சமய, தத்துவ வாதங்கள் மற்றும் சுவையான தகவல்கள் வழக்கமான சரித்திரப் புனைவுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது!
வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலையையும் அமைத்துக் கொண்டு அழகும், ஆழமும் மிகுந்த ஒரு கதையை புனைந்திருக்கிறார் நா.பா அவர்கள்!!
(விலை _ ரூ 650)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment