ஆகாயத்திற்கு அடுத்த வீடு(மு.மேத்தா)
________________________________
ஆகாயத்திற்கு அடுத்த வீடு
(மு.மேத்தா)
_________________________________
ஆசிரியர் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு.
2006 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது இந்நூலுக்கு.
பல ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான அவருடைய கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
குற்றப்பத்திரிகை, வழுவமைதி, ஞானம், மனக்கதவு, கடலுடன் ஒரு கலந்துரையாடல், வெற்றியின் மறுபக்கம் உள்பட 49 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
மதிப்பீடு :
"எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன!
எழுதாமல் இருக்கிறான்
விருதுகள் வந்தன!"
துணிச்சலாக கருத்துகளை சொல்பவர்.
எளிமையான சொற்களில், ஆழமான கருத்துகளை அசத்தலான வெளிப்பாடாகச் சொல்வது கவிஞரின் தனிச்சிறப்பு.
(விலை : ரூ 70)
(கவிதா வெளியீடு)
Comments
Post a Comment