எரிமலை(அறந்தை நாராயணன்)

_________________________________
எரிமலை
(அறந்தை நாராயணன்)
__________________________________
       மார்க்சிய சித்தாந்தத்தை தனது படைப்புகளில் எழுதி முத்திரை பதித்தவர் ஆசிரியர்.
        சமூகத்தில் பொருளாதாரச் சுரண்டல்களையும், கயமைத்தனங்களையும், கொடுமைகளையும் வெளிச்சமிட்டு வெளிக்கொணரும் சமூக கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புதினம் இது.
          முதலாளி முன் கைக்கட்டி, வாய்ப்பொத்தி, காலமெல்லாம் உழைக்கும் ஏழைகள் ஏய்க்கப் படுகிறார்கள்.அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் இளைஞன்.. அவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு போராட்டம் செய்கின்றனர்.
       சமூகநீதி, வர்க்க நியாயம் வேண்டிப் போராடுவதில் எத்தனை எதிர்பார்ப்புகள்..எத்தனை இழப்புகள் நேரிடுகிறது என்பதனை நாடகம் கதையாகப் பின்னிச் செல்கிறது.
        பெயர்கள் கற்பனை..சம்பவங்கள் உண்மை என்கிறார் ஆசிரியர் முன்னுரையில்..
புதுமையும், எழுச்சியும், நெகிழ்ச்சியும் மிக்க படைப்பு..
           (விலை : ரூ 13 ..(1991 ல்)
           (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்