மந்திரவாதியின் சீடன்(இவால்ட் ஃப்ளிஸர்)தமிழில்... அசதா
___________________________________
மந்திரவாதியின் சீடன்
(இவால்ட் ஃப்ளிஸர்)
தமிழில்... அசதா
____________________________________
ஐரோப்பிய கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகப் பிரச்சனைகள் நிறைந்து அல்லாடும் ஒருவர், தன் நாடோடி குருவான இந்திய சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் புல்வெளிகள், லாமா மடாலயங்களில் அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச் செல்லும் பயணமாக இப்புதினம் விரிகிறது.
குளிர் மலையில் ஆன்மீகப் பயணம் ..சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் இப்புதினத்தில் .. தத்துவ வாதங்களும் குறியீடுகளும் பின்னி ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டுள்ளதாக உள்ளது..
ஐரோப்பிய தத்துவத்துடன் இந்திய தத்துவ மரபும், பௌத்தகக் கருத்துகளும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடி இருக்கின்றன.
தத்துவத்தைப் பொதித்து வைத்தும் சுவாரஸ்யமாகக் கதை கூறமுடியும் என்பதற்கு இப்புதினம் ஒரு சான்றாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய புதினம் இது..
ஆழமான கருத்தாக்கங்களைக் கொண்டுள்ளது...
அசதா அவர்களின் தமிழாக்கம் சலிப்பு தோன்றாதவாறு அமைந்துள்ளது இந்நூலின் கூடுதல் சிறப்பு..
வாசிப்பை சுவாசமாகக் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம் இந்நூல்....
(விலை : ரூ 350)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment