அந்தர் முகம்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்...கௌரி கிருபானந்தன்
_____________________________
அந்தர் முகம்
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்...கௌரி கிருபானந்தன்
_______________________________
மனித உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் சுயநலம் எத்தனை விதமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய நடையில் சித்தரித்திருக்கிறார்.
அதைக் கண்டு மனிதர்களை வெறுப்பதும், தனக்குள்ளே ஒடுங்கிப் போவதுமாய் இருந்த நாயகனை "பிரணவி " என்ற சிநேகிதி, அன்பு என்ற மந்திரக்கோலால் அவன் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறாள்.
மனிதர்களிடம் படிந்துவிட்ட மன அழுக்குகளை அலசி ஆராய்வதோடு சுயநலத்தைக் குறைத்துக் கொண்டு, மனித நேயத்தை வளர்த்துக் கொண்டால் இந்த சமுதாயம் சொர்க்கத்திற்கு இணையாய் மாறும் என்ற கருத்துடன் கதை முடிவடையும்.
எண்டமூரியின் படைப்புகளில் ஓர் புதுமை. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்!
(விலை : ரூ 215)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment