பிஞ்சுகள்(கி. ராஜ நாராயணன்)

_____________________________________
பிஞ்சுகள்
(கி. ராஜ நாராயணன்)
_____________________________________  
          இக்குறுநாவலின் கதாநாயகன்  சிறுவன் வெங்கடேசு.. பறவைகளிடம் பரிவு கொண்டவன்.
அதன் அழகை ரசிப்பவன்.
       இயற்கையுடனான சில அனுபவங்கள் .. இயற்கையைப் பற்றிய தொல்லியல் தொன்மங்கள் என கதைப் போகிறது..
        இந்நூலில் இடம் பெறும் தேன் கொத்தி, தைலான் பறவை, தாராக் கோழி, தேன்சிட்டு இது போன்ற பல பறவைகளின் பெயர்கள் பலர் அறியாதவை..
        இயற்கையை கவனித்து அதை உள்வாங்கி எழுதியுள்ளதால் சுற்றுச்சூழலாளர்கள் கி.ரா விடம் பல விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.. நாமும்தான்..
        பறவைகளின் பெயர்கள் நம் நினைவில் பறந்து கொண்டிருந்தால் , பறவைகள் வானில் சுதந்திரமாகப் பறக்கும்.
இதைத்தான் கி.ரா வின் "பிஞ்சுகள் " 
நினைவுபடுத்துகிறது..
இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல் இது...
வாசியுங்கள்!
இயற்கை இலக்கியச் சோலையில் சற்றே இளைப்பாற வாருங்கள்!! 
             (விலை : ரூ 100)
             (அன்னம் அகரம் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்