எருமைப் பொங்கல் - தி.ஜானகிராமன்
___________________________________
எருமைப் பொங்கல்
(தி.ஜானகிராமன்)
____________________________________
தி.ஜா அவர்களின் 10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தினுசாக இருக்கும்.
முதல்கதை "எருமைப் பொங்கல்" ஒரு எருமைமாடு தன் வாழ்க்கையை இன்னொரு எருமைமாட்டிடம் சொல்வது போல் இருக்கும்.
"நடராசர் கால் " எதையெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டும் மனிதரைப் பற்றியது.
"நடேசண்ணா " கதை ஒரு பாடகரைப் பற்றியது. "மறுபிறவி " என்ற சிறுகதை திருட்டுப் புத்தியுள்ள கோடீஸ்வரர் வீட்டுப்பிள்ளையைப் பற்றியது.
"கடைசி மணி " கதை ஒருநாள் கூத்துக்கு திடீர் தலைமையாசிரியர் ஆன ஒரு ஆசிரியரைப் பற்றி பேசுகிறது.ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ராகம்.
தி.ஜா என்ற கலைஞருடைய அற்புதமான நெஞ்சையள்ளும் நடையழகு வாசிப்பவரை தன்வயப் படுத்தும்.
(விலை : ரூ 56)
(ஐந்திணைப் பதிப்பகம்)
Comments
Post a Comment