கண்ணன் பாட்டு (பாரதியார்)
______________________________
கண்ணன் பாட்டு (பாரதியார்)
உரை : முனைவர் கமலா முருகன்
______________________________
இந்நூலில் பாரதி 23 தலைப்புகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலியாக குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி உள்ளார்.
மற்ற தலைப்புகளில் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி காதலன் என்னும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி என்னும் தலைப்பில் 6 பாடல்களையும் பாடியுள்ளார்.
அகத்துறை மரபு சார்ந்ததாக ..காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக் கண் புதைத்தல் என்ற தலைப்புகளில் பாடல்களை அமைத்துள்ளார்.
சகோதரி முனைவர் கமலாமுருகன் அவர்கள் உரையில் படிக்கும் போது "கண்ணன் பாட்டு " பாடல்களின் பண்ணழகையும், கவிதையழகையும் ரசிக்க முடியும்.
(விலை : ரூ 50)
(சாரதா பதிப்பகம்)
பாயும் ஒளி நீ எனக்கு ..
பார்க்கும் விழி நானுனக்கு..
தோயும் மது நீ எனக்கு..
தும்பியடி நீ எனக்கு..
வாயுரைக்க வருகுவதில்லை
வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூயசுடர் வானொளியே!
சூறையமுதே! கண்ணம்மா!!
Comments
Post a Comment